ஸ்டார் நைட்! அவமானப்படுத்தப்பட்ட கமல், சூர்யா?

நட்சத்திர கலை விழா என்றாலே நடிகர் நடிகைகள் அலர்ஜியாகி ஓடி ஒளியும் நாள் சீக்கிரம் வந்துவிடும் போலிருக்கிறது. அண்மையில் ஒரு நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக இங்கிருந்து நடிகர்கள் கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மலேசியாவுக்கு சென்றிருந்தார்கள். நிகழ்ச்சியை இங்குள்ளவர்கள் ஏற்பாடு செய்திருந்தாலும், மலேசியா நிறுவனம் ஒன்றும் சம்பந்தப்பட்டிருந்தது அதில்.

வாங்க… எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம் என்று சொல்லிதான் இங்கிருந்து அத்தனை பேரையும் வரவழைத்திருக்கிறார்கள். போனால்? செம்ம்ம்ம ஷாக். அதிகாலையிலேயே விமான நிலையத்தில் இறங்கிவிட்டார்களாம் கமலும் சூர்யாவும். இவர்கள் மட்டுமல்ல, இவர்களோடு சேர்ந்து இங்குள்ள இன்னும் சில நடிகர் நடிகைகளும் அங்கு காத்திருக்க, இவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கார்கள் வரவேயில்லையாம். கிட்டதட்ட மூன்று மணி நேரம் இவர்கள் விமான நிலையத்திலேயே காத்திருந்ததாக தகவல்.

அதற்கப்புறம் நடந்ததுதான் இன்னும் கொடுமை. ஒரு ராஜா போல அழைத்துச் செல்லப்பட வேண்டிய கமல்ஹாசனை, ஒரு காரில் ஏற்றினார்கள். அவருடன் மேலும் நடிகர்களையும் அவர் போகும் காருக்குள்ளேயே திணித்தார்களாம். இப்படி ஒரே காரில் ஐந்து பேரை ஏற்றி, சட்டை கசங்கி கமலையும் சூர்யாவையும் அழைத்து சென்றார்களாம்.

பெருத்த அவமானம் என்று கவலைப்பட்டாலும், வெளி நாட்ல சிக்குனா இதெல்லாம் சகஜமப்பா என்பதால் கமலும் கப்சிப்!

சாதிச்சவங்களை சோதிக்கறதே வேலயா போச்சுப்பா இவங்களுக்கு!

Read previous post:
காந்த குரலோனுக்கு பாராட்டு விழா !

ஏசுதாஸ் குரலில் இருக்கிற வசீகரத்தை தாண்டுகிறவர் எவரும் இல்லை. ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக பாடி வரும் ஏசுதாஸ் இப்பவும் இளம் இசையமைப்பாளர்களோடு இணைந்து பாடிக் கொண்டிருப்பதுதான் ஆச்சர்யம்....

Close