லிங்குசாமி கமல் படம்! ஒரு இஞ்ச் கூட நகரலே?
முட்டு சந்துல வச்சு கெட்டி உருண்டையை ஊட்டுன மாதிரி ஆகிடுச்சு உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் நிலைமை. எந்தப்பக்கமும் ஓடவும் முடியாமல், பல்லுல வச்சு கடிக்கவும் முடியாமல் அவர் பட்ட அவஸ்தை அவருக்கே வெளிச்சம்! இந்த சினிமாவுல மட்டும்தான் இப்படியொரு அவலம்? யாரால் பாதிக்கப்பட்டீர்களோ, அவரையே மீண்டும் கோர்த்துவிட்டு விடுவார்கள். எடுத்த படம் ஓடலேன்னுதானய்யா இம்புட்டு அவஸ்தை? இதுல அவர் மறுபடியும் கால்ஷீட் தருவார். இன்னொரு படம் எடுத்துக்கோ என்றால்?
அப்படிதான் பஞ்சாயத்தை முடித்தார்கள். மீண்டும் கமல் நடிக்க, லிங்குசாமி தயாரிக்க என்று வந்தது தீர்ப்பு. ஆனால் அங்கும் ஒரு அக்கு! லிங்குசாமி முப்பது கோடி ரூபாயை கமலிடம் கொடுத்துவிட வேண்டுமாம். அவர் அந்த படத்தை எடுத்து லிங்குசாமியிடம் கொடுத்துவிடுவாராம். விற்று கல்லா கட்டிக் கொள்வது லிங்குவின் பொறுப்பு. இந்த நிலையில்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாக இணையத்தை கலக்குகிறது அந்த செய்தி. அந்த கமல் லிங்குசாமி படம் ஆரம்ப நிலைக்கு வந்திருப்பதாக செய்திகள்.
விசாரித்தால், ம்ஹுக்கும்… அது வேறயா என்று காண்டாகிறது லிங்குசாமி ஏரியா. இப்பதான் ரஜினி முருகன் வந்து லேசா மூச்சு விட வச்சுருக்கான். அதுக்குள்ளே முப்பது கோடிய புரட்டி கமல் கையில் கொடுத்துட்டு, பழத்தை புட்டால் சாறு வருமா? சக்கை வருமா? என்று காத்திருக்க இதுவா நேரம்? அதனால் பேச்சு மூச்சில்லாமல் வேறு சிந்தனையில் இருக்கிறாராம் லிங்குசாமி.
அப்ப கமல் புராஜக்ட்? எப்ப முப்பது கோடி சுளையா கைக்கு வருதோ, அப்படி வந்தாலும்… மன மகிழ்வோடு கமல் கையில் கொடுக்கிற அளவுக்கு மணி ப்ளோ இருக்கோ? அப்பதானாம்! ஜெய் ஜக்கம்மா… சீக்கிரம் வழி காட்டம்மா!