பேச வந்த கார்த்தியை பிடித்துக் கொண்ட கே.வி.ஆனந்த்!

நடிகர் கார்த்தியின் கிராஃப் ஏறுமுகமும் இறங்குமுகமுமாக அல்லாடிக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த விஷயம்தான். இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கும் மெட்ராஸ் திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகத்தை சேர்ந்த பலரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்திருக்கிறது. இந்த நேரத்தில்தான் அதிர்ஷ்டம் ஆள் வைத்து அழைத்திருக்கிறது கார்த்தியை. எப்படி?

வெற்றிப்பட இயக்குனரான கேவி.ஆனந்த் (இதில் மாற்றான் மட்டும் ஹி..ஹி..) இயக்கி வரும் படம் அநேகன். தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிகட்ட வேலைகளில் இருக்கிறார் கே.வி.ஆனந்த். டப்பிங் பணிகளும் ஜரூராக நடந்து வருகின்றன. இந்த நேரத்தில்தான் கேரக்டர் அறிமுகம் செய்ய ஒரு அழகான கம்பீரமான குரல் தேவைப்பட்டிருக்கிறது அவருக்கு. அதுவும் அவர் ஒரு ஹீரோவாக இருந்தால் இன்னும் சிறப்பு என்று நினைத்தாராம். பளிச்சென்று அவர் நினைவுக்கு வந்தவர் கார்த்தி.

தனது தேவையை கார்த்தியிடம் சொல்ல எவ்வித ஈகோவும் இல்லாமல் ஓடி வந்தாராம் கார்த்தி. வந்தவரிடம்தான் தனது அடுத்த படத்தின் கதையை கேஷுவலாக கூறியிருக்கிறார் கே.வி.ஆனந்த். ஆஹா ஓஹோ… அற்புதம் என்று மெய்சிலிர்த்த கார்த்தி, இந்த படத்தின் நானே நடிக்கிறேனே என்றாராம் கே.வி.ஆனந்திடம்.

அந்த இடத்திலேயே தன் அடுத்தப்பட ஹீரோ கார்த்திதான் என்றும் முடிவெடுத்திருக்கிறாராம் ஆனந்த்.

ஆனந்தமே உண்டாகட்டும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அழகாக சேலை கட்டு, அசத்தலான பரிசை வெல்லு….

புதுமையின் பிறப்பிடமாகவும், இளமையின் உறைவிடமாகவும் திகழ்வது ஸ்ரீபாலம் சில்க்ஸ் சாரீஸ் நிறுவனம். ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலத்தின் போது புத்தம் புதிய டிசைன்களில் பட்டுப் புடவைகளை சந்தைக்கு...

Close