பார்க்க அல்ட்ரா மாடர்ன்! வழிச்சு சீவி வடசென்னை பொண்ணாக்கிட்டாங்களே? கார்த்தி கவலை!
கார்த்திக்கு உடனடி தேவை ஒரு ஹிட்! இதற்கு முன் வந்த ஒரு சில படங்கள் புல்ஷிட் ஆனதால், இந்த அவசர தேவையிலிருக்கும் அவரை தேற்றி தெம்பாக்கியிருக்கிறது ‘மெட்ராஸ்’. அட்டகத்தி தினேஷ் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை ஞானவேல்ராஜாவிடம் கொடுக்க, அவர் பொள்ளாச்சியில் வேறொரு ஷுட்டிங்கிலிருந்த கார்த்தியிடம் சொன்னாராம். ‘ஒரு நல்ல ஸ்கிரிப்ட் பல மாதங்களா கோடம்பாக்கத்தில் சுத்திட்டு இருக்குன்னு கேள்விப்பட்டதும் நான் ரஞ்சித்தை பொள்ளாச்சிக்கே வர சொல்லிட்டேன். அதுக்கு முன்னாடியே அந்த ஸ்கிரிப்ட்டை முழுசா படிச்சு என்ஜாய் பண்ணியிருந்தேன். ‘இதில் நான் நடிக்கலாமா? என்று தினேஷிடம் கேட்க, ‘நீங்க நடிச்சா இன்னும் சந்தோஷம்’னார். கதைப்படி ரொம்ப சின்ன வயசு ஹீரோவை என் வயசுக்கு மாத்தியிருக்கோம். அவ்வளவுதான்’ என்று மெட்ராஸ் உருவான கதையை சொல்ல ஆரம்பித்தார் கார்த்தி.
எல்லாம் முடிஞ்சு ஷுட்டிங் கிளம்புறதுக்கு முதல் நாள் சார் ரெண்டு மணிக்கு ஷுட்டிங். வந்துருங்க என்றார். மதியம் ரெண்டு மணிக்கான்னு கேட்டேன். காத்தாலன்னாரு. பொதுவா ரெண்டு மணி ஷுட்டிங்னா, அவங்கள்லாம் அசெம்பிள் ஆகவே ரெண்டரை ஆகிரும். ஆனால் நான் போய் இறங்குறேன். எல்லாரும் லைட்ஸ்சை ஆன்ல வச்சுகிட்டு ரெடியா இருக்காங்க. ஒரு பிளாஸ்டிக் குடத்தை கொடுத்து, அங்க ஒரு குழாய்ல தண்ணி பிடிக்க சொன்னாங்க. மெட்ராஸ் ஸ்லாங்குல அங்கேயிருக்கிற பொம்பளைங்ககிட்ட வம்பு வளத்துக்கிட்டே தண்ணி பிடிக்கணும். அவ்வளவு காலங் காத்தால ஒரே கூட்டம் ஷுட்டிங்கை வேடிக்கை பார்க்க.
ரெண்டு தடவ டயலாக்கை நான் சொல்லிட்டு மூணாவது தடவ சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ள, கூட்டத்துலயிருந்து யாரோ ஒருத்தன் அப்படியே சொல்றான். அந்தளவுக்கு செம ஜாலியா போச்சு ஷுட்டிங். படத்துல நடிச்ச எல்லாரும், நான் என்னவோ அவங்க கூட எளிமையா பழகுனதா சொல்றாங்க. முதல்ல அவங்கதான் எங்கூட எப்படி பழகுவாங்களோன்னு இருந்திச்சு. ஆனால் நான் ஹீரோ, அவங்க ஆர்ட்டிஸ்ட்டுன்னு இல்லாம அப்படியே ஜெல் ஆயிட்டோம். எல்லாரும் வட சென்னைன்னா வேற மாதிரி நினைக்கிறாங்க. அங்கதான் லேட்டஸ்ட் பேஷன் டிரஸ் எல்லாம் உடனுக்குடன் போட்டுகிறாங்க. அவங்க போடுற ஷுவெல்லாம் அவ்வளவு காஸ்ட்லியா இருக்கு. இந்த படம் வட சென்னையோட வாழ்க்கையை ரொம்ப யதார்த்தமா சொல்லியிருக்கு.
அட்டக்கத்தி படத்தில் எல்லாத்தையும் காமெடியா சொல்லியிருப்பார் ரஞ்சித். இந்த படத்தில் எல்லாத்துலேயும் ஒரு சீரியஸ்நஸ் இருக்கும். அதுமட்டுமல்ல, தமிழ்சினிமாவுக்கு ரொம்ப முக்கியமான படமா இருக்கும் என்றார் கார்த்தி.
படத்தின் ஹீரோயின் கேத்ரினா நேரில் பார்க்க அப்படியொரு அல்ட்ரா மாடர்ன் அழகியாக இருக்கிறார். ‘அவரை வழிச்சு சீவி வட சென்னை பொண்ணா மாத்திட்டாரு ரஞ்சித். பாவம் என்னென்னவோ நினைச்சு வந்திருக்கும்… வந்த இடத்தில் இப்படி’ என்று கார்த்தி கேத்ரினாவுக்காக கவலைப்பட்டதை பார்த்தால், கல்யாணம் ஆன பையன்னு கூட பார்க்காம கண்டபடி கிசுகிசு எழுதுவாங்க போலிருக்கே?