என்னது… அஜீத்தை நான் திட்டினேனா? கருணாஸ் அதிர்ச்சி!
நடிகர் சங்கத் தேர்தலில் அஜீத் ஓட்டுப் போட வரவில்லை என்பது பெரிய பிரச்சனையாக ஓடிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். ஆனால் இது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் ரொம்பவே கூலாக இருக்கிறார் அஜீத். மழையடிச்சாலும் குடை, வெயிலடிச்சாலும் குடை என்று தனக்கு மேல் எப்போதும் ஒரு குடை ராட்டினம் சுற்றிக் கொண்டிருப்பதை விரும்பாதவர் என்பதால், சங்கமோ, தேர்தலோ அஜீத் கணக்கில் இல்லவே இல்லை.
ஆனால் அவருக்கு எதிராக ரகசிய சத்திய பிரமாணம் எடுக்காத குறைதான். சில நடிகர்கள் இனி எதற்காகவும் அஜீத் வீட்டு வாசலை மிதிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். இந்த நிலையில்தான் எடுத்த முடிவை ட்விட்டரில் போட்டுவிட்டார் என்று கருணாஸ் மீது கடும் குற்றச்சாட்டு. அஜீத் பற்றி இப்படியொரு ட்விட் செய்திருக்கும் கருணாஸ், நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, சிம்பு, டிஆர் ஆகியோரையும் நீக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். அவரது ட்விட்டர் அக்கவுன்ட்டில் பதிவு செய்யப்பட்டிருந்த இந்த தகவல் வெளியான சில நிமிடங்களுக்குள் படு பயங்கரமாக ஷேர் செய்யப்பட, வந்தது வினை.
“அட, இது எப்ப?” என்று குமுறிவிட்டார் கருணாஸ். உண்மையில் நடந்ததே வேறு என்கிறார் அவர். “என் ட்விட்டர் அக்கவுன்ட்ல யாரோ வந்து வௌயாடிட்டானுங்க. நான் மதிப்பு வைச்சுருக்கிற கலைஞர்கள் மீது நான் தவறான கருத்தை பதிவு செய்ததாக வந்தது எல்லாமே டூப். எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல…” என்று மறுத்திருக்கிறார்.
அஜீத் ரசிகர்கள் கருணாசை மன்னிப்பார்களாக!
Pandara pasanga velai ithu