ஏரியாவுக்கு 2 கோடி எக்ஸ்ட்ரா! இது கத்தி களேபரம்….

‘இன்னும் ட்ரெய்லர் வர்லீயே அண்ணாச்சி’ என்று விஜய் ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்க, ‘ட்ரெய்லர் என்னத்துக்கு? மெயின் பிக்சரே ரெடி’ என்று ஷட்டரை ஓப்பன் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் கத்தி தயாரிப்பாளர்கள். படம் வருமா? வராதா? என்கிற வதந்தியை கடைசி நிமிடம் வரைக்கும் பரப்புகிற கோஷ்டி ஒன்று விஜய் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது குழப்பதை ஏற்படுத்தி வந்தாலும், அது யார்? எதற்காக? என்கிற உண்மையையும் கண்டு பிடித்த கத்தி டீம், அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்களாம். அதுவும் ஒரு அலட்சிய புன்னகையோடு.

முதல் குழப்பம் எங்கிருந்து?

துப்பாக்கியை விட இந்த படத்தின் விலை ஏரியாவுக்கு ஏரியா அதிகரித்து வந்ததும் ஒரு காரணம். உதாரணத்திற்கு கோவை ஏரியாவில் மட்டும் துப்பாக்கியை விட கத்திக்கு இரண்டு கோடி எக்ஸ்ட்ரா தொகைக்கு நிர்ணயிக்கப்பட்டதாம். அதாவது துப்பாக்கி ஏழு கோடிக்கு விற்கப்பட்ட அதே கோவையில் இப்போது ஒன்பது கோடிக்கு கத்தி விற்கப்பட்டதாக தகவல். இந்த விநியோகஸ்தர் இதற்கு முன்பு துப்பாக்கியை வாங்கிய விநியோகஸ்தர் அல்ல. இந்த ஒரு காரணத்திற்காகவே படம் வெளியே வராது என்கிற புரளி கிளப்பிவிடப்பட்டு தியேட்டர்காரர்கள் கொடுக்கிற அட்வான்ஸ் தொகைக்கு வேட்டு வைக்கிறார்களாம் சிலர். இருந்தாலும் கடைசி நேரத்தில் உனக்கு எனக்கு என அடித்துக் கொண்டு திரள்வார்கள் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் இந்த ஒன்பது கோடி விநியோகஸ்தர்.

இதற்கிடையில் சிட்டி, என்.எஸ்.சி என்ற மிக முக்கியமான ஏரியாவில் கத்தியை ஐங்கரன் நிறுவனமே வெளியிட இருப்பதால் மற்ற ஏரியாக்களை மட்டும் விநியோகம் செய்துவிடும் மன நிலையில் இருக்கிறது தயாரிப்பு தரப்பு. சொல்லி வைத்தார் போல மற்ற ஏரியாக்களுக்கான வியாபாரம் படு சூடாக துவங்கி அதே வேகத்தில் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வருகிறது.

பொதுவாக ஒரு ஹீரோவின் வெற்றியை இன்னொரு ஹீரோ முறியடித்தால்தான் தப்பு. அதே ஹீரோ அவரது முந்தைய படத்தின் வியாபாரத்தை முறியடித்து புதிய சாதனை படைத்தார் என்றால் அதுதான் சிறப்பு. கத்தி அந்த சிறப்பை விஜய்க்கு வழங்கும் என்றே தோன்றுகிறது.

Read previous post:
Murugatrupadai Audio Launch Stills

Close