கத்திக்கு க்ளீன் U சர்டிபிகேட்! கொண்டாட்டத்தில் விஜய்

கத்தியை பொருத்தவரை இது அடுத்த பாய்ச்சல்தான். கத்தி தீபாவளிக்கு வருமா, வராதா? என்ற எண்ணத்தை வெகுவாக தகர்த்திருக்கிறது ஏ.ஆர்.முருகதாசின் ட்விட். யெஸ்… கத்தி திரைப்படத்திற்கான சென்சார் ஷோ இன்று சென்னையில் நடைபெற்றது.

எந்த காட்சியை நீக்க சொல்வார்களோ? எதை சொல்லி குறுக்கே கட்டையை போடுவார்களோ? என்று கோடம்பாக்கம் திகிலோடு காத்திருக்க, க்ளீன் யூ சர்டிபிகேட் கொடுத்துவிட்டதாம் சென்சார் அமைப்பு. இதை தொடர்ந்து வரிவிலக்கு ஷோ ஒன்றும் தனியாக ஏற்பாடு செய்யப்படும். அது கிடைக்கிறதோ, இல்லையோ? தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது இந்த நல்ல செய்தி.

முருகதாஸ் ட்விட் செய்வதற்கு சில நொடிகளுக்கு முன்பே விஜய்யும் தன் ட்விட்டர் தளத்தின் மூலம் அதிகாரபூர்வமாக இந்த செய்தியை பரவ விட்டிருக்கிறார்.

இனி க்ளைமாக்ஸ்தான்! அதற்கான பரபரப்பு ஸ்டார்ட்….!

Read previous post:
பிரபல ஹீரோவுக்கு அடி உதை! மருத்துவமனையில் சிகிச்சை?

‘உயிரையே கொடுத்து நடிப்பேன். ஒரு சான்ஸ் கொடுங்க சார்...’ என்று ஆக்ஷன் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டால் ஐயோடெக்ஸ் அமிர்தாஞ்சன் செலவே ஆயிரங்களை தொடும். ‘டெடிக்கேஷன் சார்...

Close