கத்தியை வாங்கிய ஜெயா டி.வி? காற்றாய் பறக்குமே எதிர்ப்பு!

நாளை மாலை (செப்டம்பர் 18) கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அது எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெறுமா? கடைசி நேரத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படுமா என்றெல்லாம் வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறது ரசிகர்கள் கூட்டம். அந்த சிக்கலை மேலும் உறுதி படுத்துவதை போல தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், கத்தியை எதிர்க்கும் தமிழர் அமைப்புகளுக்கான குழுவின் தலைவருமான வேல் முருகன் ‘இந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்.

விளம்பரத்திற்காக சில அமைப்பினர் குரல் கொடுக்கிறார்கள் என்று சில தினங்களுக்கு முன் சென்னை வந்த கத்தி படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கரண் அல்லிராஜாவும் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்த விஜய் ரசிகர்கள், ‘நாளைய பொழுது நல்லா விடியுமா ?’ என்றே கவலைப்பட ஆரம்பித்திருந்தார்கள். எல்லாவற்றுக்கும் அருமருந்தாக வந்து சேர்ந்திருக்கிறது ஒரு தகவல். அது…?

கத்தி திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜெயா தொலைக்காட்சி வாங்கியிருக்கிறதாம். காவல்காரனிடமே கல்லா பெட்டியை ஒப்படைத்தாயிற்று? இனி பயமின்றி பயணத்தை தொடரலாம்!

ஆமா… ஏதோ மனு கினுன்னு சொன்னீங்களே…? அட போங்கப்பா. அது ச்சும்மா தமாஷுக்கு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹீரோவாகிறார் பாபி சிம்ஹா – இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

ஜிகிர்தண்டா படத்தில் வில்லனாக நடித்ததிலிருந்தே பாபி சிம்ஹாவை ஹீரோவாக்கி பார்க்க துடிக்கிறார்கள் பல இயக்குனர்கள். கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகளுக்கெல்லாம் இப்படி ஒரே ராத்திரியில் ஹீரோ இமேஜை ஊட்டிவிட்டு நல்ல...

Close