ஏ.ஆர்.முருகதாஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்… ‘ வச்சு செய்யறதுக்காக ’ வந்துருக்காங்க!
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தக் கிளம்பி வந்திருக்கிறார் தஞ்சையை சேர்ந்த ஒரு இளம் இயக்குனர். பெயர் அன்பு ராஜசேகர். இவர் எழுதி இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கையால் வெளியிட்டிருக்கிறார். அந்த குறும்படத்தைதான் ‘கத்தி’ என்ற பெயரில் படமாக ‘அடித்து’விட்டார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று குற்றம் சாட்டி வருகிறார் அன்பு ராஜசேகர். கத்தி வெளிவருவதற்கு முன்பே இவரும் ஊரிலிருந்து கிளம்பி வந்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
ஒரு போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்கு என்னவெல்லாம் தந்திரம் உண்டோ, அவ்வளவையும் கையாண்ட முருகதாஸ் இறுதியில் படத்தை வெளியிட்டு கல்லாவையும் நிரப்பி விட்டார். இருந்தாலும் தன் போராட்டத்திலிருந்து சற்றும் மனம் தளராத அன்பு ராஜசேகர், 7/4/2016 ம் நாள் தஞ்சையில் ஒரு மாபெரும் உண்ணவிரத போராட்டத்திற்கு அ-ழப்பு விடுத்திருக்கிறார். அங்கு வைக்கப்படும் கோரிக்கை என்ன தெரியுமா? இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்க என்பதுதான்.
இந்த உண்ணாரவிரத போராட்டத்தில் தஞ்சை விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களும், பிரபல அரசியல் கட்சி பிரமுகர்களும் கூட கலந்து கொள்ளப் போகிறார்கள். தனிக்குரல் இப்போது கூட்டுக்குரலாக ஒலிக்கவிருக்கிறது.
என்ன செய்யப் போகிறாரோ ஏ.ஆர்.முருகதாஸ்?