மருத்துவமனையில் கே.பி. – சீன் போடும் கூட்டம்?

ரஜினி கமல் என்ற இருபெரும் இமயங்களை இன்டஸ்ட்ரிக்கு வழங்கியவர் என்பதால் மட்டுமல்ல, காலத்தால் அழிக்க முடியாத படங்களை நமக்கு வழங்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் என்பதாலும் அவரை பீஷ்மர் இடத்தில் வைத்திருக்கிறது திரையுலகம். தள்ளாத வயதிலும் கூட சினிமாவை பற்றியே சிந்திப்பவர். கடந்த பல மாதங்களாகவே முதுமையின் காரணமாக அவதியுற்று வந்தார். அப்போதெல்லாம் அவருடன் இருந்து அவரை நன்றாக கவனித்துக் கொண்டவர் அவரது உதவியாளர் மோகன். பாத்ரூமுக்கு நடந்து செல்லக்கூட முடியாதவரை கைதாங்கலாக அழைத்துச் சென்றதுடன் நில்லாமல் அவரது இன்றியமையாத தேவைகளை கூட அருவருப்பு படாமல் நிறைவேற்றி வந்ததும் மோகன்தான்.

சரி… அப்புறம்? கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நிலை மிகவும் நலிவடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் பாலசந்தர். திரையுலகத்திற்கு விஷயம் பரவி ரஜினி ஓடோடி வந்தார். அவர் வருகிறார் என்றவுடன் மீடியாக்களும் ஓடோடி சென்றன. அதற்கு முன்பே குவிந்த மீடியாக்களும் அதிகம். மருத்துவமனை வாசல் முழுக்க கேமிராக்கள் கேமிராக்கள்… மீடியா மட்டும் வரவில்லை என்றால் பல முக்கியமான விஷயங்களை மறுநாள் நாளிதழில் வாசித்து தெரிந்து கொள்கிற மூடில் இருக்கிற சில சுயநலமிகள், ‘ஆஹா… கேமிராவுக்கு முன்னாடி கண் கலங்கலாம்’ என்று திட்டமிட்டு ஓடி வந்தார்கள்.

கூட்டத்தில் அவரது வசந்தமான சிஷ்யர், நிறுவனத்தின் பெயரை தன் பெயரிலேயே சுமந்திருக்கும் கடவுள் பெயர் கொண்ட நடிகர் என சிலரும் இருந்தார்கள். இவ்வளவு நாட்களாக அவருக்கு உடல்நிலை முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தும் அங்கு ஒருமுறை கூட எட்டிப்பார்க்காத இவர்கள் அந்த ஸ்பாட்டில் செய்த அலப்பறை இருக்கிறதே.. சொல்லி மாளாது என்கிறார்கள். நான்தான் அவருக்கு எல்லாமும் என்பதை போல சீன் போட்டார்களாம்.

எல்லாவற்றையும் ஒதுங்கி நின்று அரவம் இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மோகன். பாலசந்தர் வீட்டுக்கு நலமுடன் திரும்பி வந்தாலும், அவரை கவனிக்க பேகிறவர் இவர்தான். மீடியாவே… கொஞ்சம் அவர் பக்கமும் திரும்பு. (அவர் அதை விரும்பாவிட்டாலும்)

(படத்தில் பாலசந்தருக்கு வலது புறத்தில் இருப்பவர்தான் மோகன்)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
17 பாட்டு…. பதினேழும் பாட்டு!

சபாஷ் சரியான போட்டி!!! இசையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பாடல் போட்டி ஆகட்டும், நடன போட்டி ஆகட்டும்,அந்த வகையான போட்டிகள் திரையில் இருந்தால்...

Close