கீர்த்தி சுரேஷ் அனிருத்! ஆரம்பித்தது அடுத்த கலகம்!

‘பிஞ்சிலே பழுத்தது’ என்று சிலருக்கு மட்டும் முத்திரை குத்தி வைத்திருக்கும் தமிழ்சினிமா. அதிலும் ஐஎஸ்ஐ முத்திரை வாங்கிய பெருமை அனிருத்துக்கு உண்டு. ஆன்ட்ரியாவுக்கும் இவருக்குமான லவ், அர்த்த ராத்திரியில் டமால் ஆன பின்பு அவர் ஒரு பக்கம், இவர் ஒரு பக்கம் ஆகிவிட்டார்கள். அதற்காக ஐம்புலன்களை அடக்கியாள அனிருத் என்ன முனிவரா? ஒருபுறம் வழிந்தோடும் இசை, மறுபுறம் புரண்டோடும் சந்திப்புகள் என்று எப்பவும் பிசியாகவே இருக்கிறார் ப்ரோ.

இந்த நேரத்தில் உள்ளுர் சேவையை அப்படியே ஓரங்கட்டிவிட்டு எங்க ஊருக்கும் வாங்கப்பு… என்று அன்பு அழைப்பு விடுத்தது ஆந்திரா. முதன் முறையாக தெலுங்கு படம் ஒன்றுக்கு இசையமைக்கப்போன அனிருத்துக்கு, அதுவே பேரதிர்ஷ்டம். எப்படி? ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண்தான் அப்படத்தின் ஹீரோ. அனிருத்தின் என்ட்ரியை அங்கே ஆனந்தமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்ற மற்ற ஹீரோக்களும் அனிருத்தின் மீது தன் பார்வையை திருப்ப… அவரோ தன் பார்வையை கீர்த்தி சுரேஷ் பக்கம் திருப்பியிருக்கிறாராம்.

இந்த பவன் கல்யாண் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தியை நடிக்க வைக்கச் சொல்லி அனிருத்தே வாய்ப்பு கேட்க, மறுப்பேதும் சொல்லாமல் இவர் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் பவன். எப்படியோ இந்த விஷயம் வெளியே கசிந்துவிட்டது. அனிருத் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்பு வாங்கி தருகிறார் என்றால், என்னவோ இருக்குப்பா இரண்டு பேருக்கும் என்று பற்ற வைக்க ஆரம்பித்துவிட்டது ஆந்திரா மீடியா.

எப்படியோ… அனிருத்தின் புகழ் ஆந்திராவிலும் ஆம்லெட் போட ஆரம்பித்துவிட்டது. கல்லு சூடாயிருந்தா ஆம்லெட் என்ன? ஆந்திராவையே கூட அதில் புரட்டி புரட்டிப் போடலாம். இல்லையா அனிருத்?

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முப்பதடி அகலம்! முங்க முங்க தண்ணி! ப்ரியா ஆனந்தை போட்டு இம்சித்த டைரக்டர்!

அணையப் போற விளக்குதான் அநியாயத்துக்கு பிரகாசிக்கும்னு சொல்வாங்க. தமிழ்சினிமாவில் ப்ரியா ஆனந்தின் மார்க்கெட், கிட்டதட்ட அணையப்போற நேரத்துலதான் ‘முத்துராமலிங்கம்’ என்றொரு படத்தை வழங்கியது காலம்! (காலம் வழங்குச்சா,...

Close