காக்கா முட்டை மணிகண்டனின் கதைக்கே இப்படியொரு அவலமா?

தமிழ்சினிமாவின் பொன் முட்டை என்று வர்ணிக்கப்படுகிறார் காக்கா முட்டை மணிகண்டன். ஏன் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இப்படியொரு அற்புதமான படம் வந்ததேயில்லையா? ஏன் இவ்வளவு கொண்டாட்டம்? என்றெல்லாம் மனம் புழுங்கிகள் கதறிக் கொண்டிருந்தாலும், உலக விருதுகளின் கதவெல்லாம் இன்னும் திறந்து திறந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது இப்படத்தை.

அவ்வளவு பெருமைக்குரிய மணிகண்டன் எழுதிய கதையை கொண்டு உருவானதுதான் கிருமி என்ற படம். இதன் தயாரிப்பாளர் ரஜினியின் முன்னாள் தனிச் செயலாளர் ஜெயராமன். இந்த படத்தை ரிலீஸ் செய்வதில், அவ்வளவு அனுபவம் வாய்ந்த அவருக்கே உச்சி மண்டை உவ்வே ஆகிக் கொண்டிருக்கிறது. எந்தெந்த கம்பெனிகளின் கதவையெல்லாமோ தட்டிய அந்த மனிதன், பாவம் போ என்பதை சுருக்கினால் வரும் ஆங்கில எழுத்துக்கு சொந்தக்கார கம்பெனியின் கதவையும் தட்டியிருக்கிறார். படத்தை அவர்களுக்கு போட்டும் காண்பித்தாராம். பார்த்தவர்கள், “படம் நல்லாயிருக்கு. ஆனால் அந்த க்ளைமாக்சை மாத்துனா நாங்க வாங்கி ரிலீஸ் பண்ணிக்குறோம்” என்று சொல்ல, பேரானந்தம் வந்துவிட்டது ஜெயராமனுக்கு.

இருக்கிற கஷ்டத்தில் மேலும் கொஞ்சம் பணம் போட்டு வேறொரு க்ளைமாக்சை ஷுட்டிங் செய்து அதை படத்தில் இணைத்து கொண்டு போய் காட்டினாராம். அதற்கு அவர்கள் சொன்ன பதில்தான் ஷாக். அப்போ சொல்லிட்டோம். ஆனால் அதுக்கு பிறகு யோசிச்சு பார்த்தோம். படம் வேணாம்னு தோணுது. அதனால் வேணாம் என்றார்களாம். (விக்ரமையெல்லாம் வச்சு வௌங்காத படம் கொடுத்த ஆசாமிகள்தானே நீங்க? இது எப்படி நல்லாயிருக்கும்?) அதிர்ந்து போன ஜெயராமன், அடப்பாவிகளா… என்று கையை பிசைந்து நிற்க, ஆபத்தில் கை கொடுக்க முன் வந்திருக்கிறார் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன். சிவகார்த்திகயேன், தனுஷ் படங்களை வெளியிட்டு வரும் அவர், கிருமி படத்தையும் வாங்கி வெளியிட முன் வந்திருக்கிறாராம்.

கிருமின்னு பேரு வச்சதும், அந்த இங்கிலீஷ் கம்பெனி கிருமி நாசினுன்னு நெனைச்சுட்டாங்க போல!

Read previous post:
இமான் வந்தாக… ஜி.வி.பிரகாஷ் வந்தாக… சித்தார்த் வந்தாக… களைகட்டிய தாஜ்நூர் ஸ்டூடியோ!

கவிஞர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் நடுவே எப்போதும் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும். அதிலும் இரண்டு முக்கியமான திரைப்பட பாடலாசிரியர்களாக தமிழ் திரையுலகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பா.விஜய்யும், சினேகனும் ஹீரோவாக நடிக்கும்...

Close