ஹீரோயின் விஷயத்தில் தில்லுமுல்லு? ஷுட்டிங்கையே கேன்சல் செய்த இயக்குனர்
சிவி.குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘சரபம்’. விளம்பர செலவு, தயாரிப்பு செலவு, தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கான செலவு என்று சுமார் பத்து கோடியை விழுங்கிய அந்த படம் அதில் பத்து சதவீதத்தை கூட அறுவடை செய்யவில்லையாம். அதற்குள் அதே ஹீரோவான நவீன் சந்திராவை வைத்து அடுத்த படத்தை துவங்கிவிட்டார் சி.வி.குமார். இயக்கமும் அவரே.
படப்பிடிப்புக்கு போன இடத்தில்தான் பஞ்சாயத்து. சல்லடை போட்டு சலிக்காத குறையாக ஒரு ஹீரோயினை தேடிக் கொண்டிருந்தாராம் குமார். சரபம் படத்துலதான் பொண்ணா…? பொம்பளையா? என்றே தெரியாதளவுக்கு ஒரு ஹீரோயின் அமைந்தார். இந்த படத்திலாவது லட்டு மாதிரி ஒரு ஹீரோயினை நடிக்க வைப்போம் என்று நினைத்தாராம். எனவே அந்த தேடல் இன்னும் இன்னும் பலமாகிக் கொண்டே இருந்ததாம். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை பார்த்தும் திருப்தியில்லையாம் அவருக்கு. அந்த நேரத்தில்தான் தனது உயிர் தோழி ஒருவரிடம் காதை கடித்த ஹீரோ நவீன் சந்திரா, ‘நான் உனக்கு ரெகமண்ட் பண்ணினா வாய்ப்பு தர மாட்டாரு. நீயா வந்து அப்ரோச் பண்ற மாதிரி பண்ணு. உன் அழகுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்’ என்று கூறி வரவழைத்தாராம். நினைத்தபடியே எல்லாம் நடந்தது. ஹீரோயின் செலக்ட்டட்!
ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போன பின்தான் இந்த உண்மை டைரக்டருக்கு தெரிய வந்ததாம். ஏதோ ஒரு இனிப்பான சந்தர்ப்பத்தில் உண்மையை உளறி கொட்டி விட்டாராம் அந்த நடிகை. அதிர்ச்சியானாராம் சி.வி.குமார். ‘அட… இவ்வளவு தில்லுமுல்லா உங்ககிட்ட? கௌம்புங்க ரெண்டு பேரும்’ என்று கூறிவிட்டு ஷுட்டிங்கையே கேன்சல் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டாராம்.
கடலை பொறியலேன்னு கல் சட்டிக்கு கவலை, கல் சட்டி சுடலேன்னு அடுப்புக்கு கவலை!