என்னை நார் நாரா கிழிங்க! உணர்ச்சிவசப்பட்ட மிஷ்கின்!
அழுதா பனிமலை. ஆத்திரப்பட்டா எரிமலை என்று முகம் காட்டுவது ரொம்ப கஷ்டம்தான். ஆனால் அந்த வேலையை கச்சிதமாக செய்து வருகிறார் மிஷ்கின். சாப்டியா என்று கேட்பதையே கூட, ரசம் மோர் கூட்டுப் பொரியல் எல்லாத்தையும் கலந்து பிசைஞ்சு கேட்பது போல கேட்பதுதான் அவரது ஸ்டைல்.
இந்தநிலையில் அவரே கதை வசனம் எழுதிய சவரக்கத்தி ஹிட் என்றால், மனுஷன் தடுமாறுவாரா, மாட்டாரா? ஒழுங்கா நல்ல படம் எடுக்கலேன்னா என்னை நார் நாரா கிழிங்க என்று பிரஸ் முன்னால் உணர்ச்சிவசப்பட்டார். அப்படியே நடிகை பூர்ணா குறித்து அவர் சொன்ன வார்த்தைகள், பிற நடிகர்களும் இயக்குனர்களும் கவனிக்க வேண்டிய தனி சொற்கள்.
‘பூர்ணா இந்தப்படத்தில் பிரமாதமா நடிச்சுருந்தார். அவருக்கு நல்ல சகோதரனாக, நல்ல தோழனாக, ஒரு சித்தப்பாவாக இருப்பேன்’ என்றார். இதோடு விட்டிருந்தால் பத்தோடு பதினொன்று. அவருக்காகவே கதை எழுதுவேன் என்றும் கூறிய மிஷ்கினின் அன்பையும் மரியாதையையும் என்னவென்பது?
சொன்னதோடு நிறுத்தாமல் சீரியசாகவே பூர்ணாவின் முழு திறமையையும் வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு படம் எடுங்க மிஷ்கின்.