‘கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் ’ இப்போது புத்தக வடிவில்….
நமது நியூதமிழ்சினிமா.காம் இணையதளத்தில் தொடர் கட்டுரையாக வெளிவந்த கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் மேலும் சில பகுதிகளுடன் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இயக்குனர் பாண்டிராஜ் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.
சினிமாவில் இயக்குனராக சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு தேவையான பல்வேறு விஷயங்களை திரையுலக முக்கியஸ்தர்களின் நேர் காணலுக்கு பிறகு தொகுத்து வழங்கியுள்ளேன். புத்தக சந்தையில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்த கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் புத்தகம் ‘போதி பதிப்பகம் ஸ்டாலில்’ கிடைக்கும்.
விலை எண்பது ரூபாய்க்கும் குறைவுதான். வாங்கியவர்கள் படித்துவிட்டு நமது இணையதளத்தின் கமென்ட் பாக்சில் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.
-ஆர்.எஸ்.அந்தணன்