அடுத்த அரண்மனை கோப்பெருந்தேவி? விநியோகஸ்தர்கள் விரைவு…!

அண்மையில் வந்த ‘அரண்மனை’தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ரிசர்வ் பேங்க்! வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் மட்டும் கூட்டம் கூடுவதும் திங்கட் கிழமையிலிருந்து அது தலைகுப்புற சரிவதும்தான் ஒரு ரிலீஸ் படத்தின் தலையெழுத்து. ஆனால் அரண்மனை அப்படியில்லை என்கிறது விநியோகஸ்தர் வட்டாரம். ஒரு உதாரணத்திற்கு சொல்லப்படும் தகவல் இது. சென்னை கமலா திரையரங்கத்தில் அடுத்த வாரம் வெளிவரப்போகும் மெட்ராஸ், ஜீவா திரைப்படங்களுக்கு தியேட்டர் கேட்கப்பட்டதாம். சொல்லப்பட்ட பதில் என்ன தெரியுமா? செவ்வாய் கிழமையும் ஃபுல்லா போவுது அரண்மனை. போகிற போக்கை பார்த்தா தீபாவளி வரைக்கும் அதுவே ஃபுல்லா போகும் போல தெரியுது. அதனால் உங்க படத்திற்கு ஒரு ஷோ ரெண்டு ஷோதான் தர முடியும். அதுவும் மினி கமலாவில் என்றார்களாம்.

கிட்டதட்ட தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை! காஞ்சனா, யாமிருக்க பயமே படங்களின் வெற்றியை தாண்டி அரண்மனை கல்லா கட்டும் போலிருக்கிறது. இந்த நேரத்தில் இதே டைப் படங்களை வாரிக்கொடுத்து வாங்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். லாரன்சின் முனி பார்ட் 3 படம் முடிவதற்கு இன்னும் பல வாரங்கள் இருக்கிறது. இருந்தாலும் இப்பவே என்ன ரேட் சொல்றீங்க என்று கிளம்பி வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

அப்படியே இதே டைப்பில் ஏகப்பட்ட செலவில் எடுக்கப்பட்ட கோப்பெருந்தேவி படத்தையும் வாங்க ஆளாய் பறக்கிறார்களாம். அரண்மனை வாங்கிய அதே விநியோகஸ்தர்கள் படத்தை மொத்தமாக கொடுத்துருங்க என்று ஒருபுறம் மொய்த்து எடுக்க, சமீபத்தில் ஒரு படத்தை வெளியிட்ட பசையுள்ள டாக்டர் ஒருவரும் போட்டியில் இறங்கியிருக்கிறாராம். கடந்த பல மாதங்களுக்கு முன் பெரும் பொருட்செலவில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்ட கோப்பெருந்தேவி, அதற்கப்புறம் கிராபிக்ஸ் பணிகளுக்காக இன்னும் இன்னும் என்று தள்ளிப் போடப்பட்டு முழு திருப்தியோடு தயாராகிவிட்டதாம்.

சுமார் 14 முன்னணி காமெடியன்கள் இதில் பர்பாமென்ஸ் பண்ணியிருக்கிறார்கள் என்பதைவிட, ஆந்திராவின் அனுஷ்காவை விட அழகான அரேபிய குதிரையாக காட்சியளிக்கும் புதுமுகம் ஆராத்யா இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்பதுதான் இன்னொரு காரணமாம்.

அகில உலக ஆவியெல்லாம் சேர்ந்துதான் இப்படி ரசிகர்களின் மைண்டை மாற்றி திகில் படங்களை ஓட வைக்குதோ?

Read previous post:
நிருபர்கள் வெளியே நிற்கிறார்கள்! ஆடியோ விழாவில் சீனு ராமசாமி கவலை!

கடந்த சில தினங்களாகவே கொதிக்கும் கொப்பரையாக இருக்கிறது கோடம்பாக்கம். ஒட்டுமொத்த சென்னையையும் ‘வை-ஃபை’ என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இன்டர்நெட் வசதி செய்து தரும் நோக்கத்தோடு விஞ்ஞான உலகத்திற்கு...

Close