பிரபுவுடன் இணைகிறார் குஷ்பு தமிழ்சினிமாவில் திடீர் திருப்பம்!

கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்கிற ஆசையை முழுவதுமாகவே விட்டொழித்திருந்தார் குஷ்பு. அவரது ஒரே ஆசை கழகத்திற்கு வலு சேர்த்து அதை கான்கிரீட் பில்டிங் ஆக்குவதாகதான் இருந்தது. அப்படியும் டி.வி சீரியல்களில் தலை காட்டி வந்தார் அவர். காரணம் கேட்டவர்களிடம், அந்த இடியட் பாக்ஸ் தானே வீட்டுக்குள்ளே போய் பெண்களை பார்த்து ‘சவுக்கியமா?ன்னு கேட்குது? அதனால் நான் ஒவ்வொரு தாய்குலத்தையும் நேர்ல சந்திக்கிற திருப்தி கிடைக்குது. டி.வி யில் நடிப்பது மட்டும் தொடரும் என்று கூறிவந்தார்.

இந்த கொள்கை கோட்பாடு புரியாதவர்கள் தொடர்ந்து குஷ்புவை சினிமாவில் நடிக்க அழைத்துக் கொண்டேயிருந்தார்கள். இந்த லட்சணத்தில் ‘பிரபுவோட காம்பினேஷன்… நடிக்கிறீங்களா?’ என்று நட்பு வட்டத்திலிருக்கும் சில இயக்குனர்களே கேட்க, அதையும் உறுதியாக தவிர்த்து வந்தார் குஷ். ஒரு காலத்தில் சூர்யா ஜோதிகா, பிரசன்னா சினேகா, போன்ற அழகான காம்பினேஷன்களுக்கு இணையாக பேசப்பட்ட இணை இது. இருவரும் சேர்ந்து நடித்த பல படங்கள் இந்த ஜோடிக்காகவே ஓடியது. அப்புறம் இருவருக்கும் லவ் என்று மீடியா எழுதி எழுதி கெட்டிமேளம் கொட்டிக் கொண்டிருந்தது. முன்னணி நாளிதழ் ஒன்றில் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாகவே செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதற்கப்புறம் ஒரே காச் மூச்!

சரி… மேட்டருக்கு வருவோம். சமீபத்தில் தனது கொள்கையை தளர்த்திக் கொள்ளும்படி ஒரு கதை கேட்டாராம் குஷ்பு. ‘இந்த படத்துல நீங்களும் பிரபு சாரும் ஜோடியா நடிக்கணும்’ என்று இயக்குனர் கேட்டுக் கொள்ள, அந்த கதைக்காக மட்டுமே இதற்கு ஒப்புக் கொண்டாராம் குஷ்பு. பிரபுவும் சரி என்று சம்மதிக்க, பரணில் மூடி வைத்திருந்த பட்டு கம்பளம் மீண்டும் விற்பனைக்கு வருகிறது. அதுவும் ஜோடியாக!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘முன்னால் பார்த்தால் முழு நிலா, பின்னால் பார்த்தால் பிறை நிலா’

‘முன்னால் பார்த்தால் முழு நிலா, பின்னால் பார்த்தால் பிறை நிலா’ என்று அவ்வளவு அழகாக இருக்கிறார் தேஜஸ்வினி. ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் ஹீரோயின். அப்படி பின்னால் பார்க்கும்போது...

Close