ஜெயம் ரவிக்கு குஷ்பு ஸ்பெஷல் பரிசு! யூகிங்க பார்க்கலாம்…

கற்பு பற்றி பேசினால்தானே குஷ்புவை சதாய்ப்பீர்கள்? நட்பு விஷயத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் எப்பவுமே ஸ்பெஷல்தான். “என் பெட்ரூம்ல யார் போட்டோவையும் நான் மாட்டுனதில்ல. ஒரே ஒரு ஆள் போட்டோதான் இருக்கு. அது கார்த்திக்” என்று சினிமா மேடையில் பேசி, தனக்கும் அவருக்கும் உள்ள ஆழமான நட்பை நாட்டுக்கு வெளிப்படுத்தினார் குஷ்பு. இருவரும் ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? குஷ்பு தமிழில் அறிமுகமான வருஷம் 16 படத்தில் கார்த்திக்தானே ஹீரோ? ஒரு பொதுவிழாவில் தன் வீட்டு போட்டோ வரைக்கும் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிற தைரியம் இங்கு எந்த நடிகைக்கும் இல்லை.

இதோ- அந்த நட்பின் அடுத்த மைல்கல் இது!

இதுவரை தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் தனது படத்தை மட்டுமே வைத்திருந்த குஷ்பு, இப்போது ஜெயம் ரவி படத்தை வைத்திருக்கிறார். இன்னும் சில தினங்களில் பூலோகம் திரைக்கு வரப்போகிறது. அதை கொண்டாடும் விதத்தில்தான் இந்த போட்டோ.

எனிவே… அரசியலுக்கு போனாலும், சினிமாவை அப் டேட்டாக வைத்திருக்கும் அவரை பாராட்டதான் வேண்டும்!

Read previous post:
ரஜினி யோசனை! ரஞ்சித் கேட்பாரா? ஒரு விறுவிறு… பரபர…

கிட்டதட்ட 65 நாட்களுக்கான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து முடிந்துவிட்டது. இன்னும் 45 நாட்கள் சென்னையில் எடுக்கப் போகிறார்களாம். மலேசியா ஷுட்டிங்கின் போது யூசர் பிரண்ட்லியாக இருந்த ரஜினி,...

Close