இடுப்பளவு தண்ணீர் இறங்கி நடந்த குஷ்பு!

குஷ்புவை அரசியல் இயக்குகிறதா, அல்லது அவரது இளகிய மனசு இயக்குகிறதா? அது முக்கியமில்லை. கடந்த வாரம் அடித்த மழையாக இருந்தாலும் சரி. நேற்று இன்று பெய்து வரும் மழையாக இருக்கட்டும்… களத்தில் இறங்கிவிட்டார் குஷ்பு. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு இடுப்பளவு நீரில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

மக்களுக்கு ஆறுதலும் சொல்லி வருகிறார். யாரும் கவலைப்படாதீங்க. நாங்க காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் பவனை திறந்துவிட்ருக்கோம் என்று கூறிய குஷ்பு, அரசு உடனடியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நல்லவேளை… குஷ்புவை அருகில் பார்க்கும் ஆசையில் யாரும் தள்ளுமுள்ளு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நம்ம பிரச்சனையே நாக்கு தள்ள வைக்குது. இதுல இது வேறயா என்று நினைத்திருக்கலாம்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி தந்ததை விட பல மடங்கு! அள்ளி வழங்கிய தெலுங்கு ஹீரோக்கள்!

இப்படியொரு ஒப்பீடு தேவையா? என்றெல்லாம் வள்ளென்று விழுந்து வயிறு வரை எரியும் ரஜினி ரசிகர்கள் இந்த தலைப்பை படித்துவிட்டு அப்படியே ஷட்டவுன் பண்ணிவிட்டாலும் கவலையில்லை. பட்... அண்டை...

Close