விஜய் சேதுபதியுடன் கூட்டணி! ஒரு வழியாக கே.வி.ஆனந்த் டேக் ஆப்
அனேகன் படத்தின் வெற்றி தோல்விக்குப் (அவ்ளோ குழப்பம் இருக்கு அந்த விஷயத்தில்) பின், கே.வி.ஆனந்த் யாரை வைத்து படம் எடுக்கிறார்? இந்த கேள்வியை சுமந்து கொண்டு திரிந்த பலருக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. ஏன்…அவருக்கே அதில் ஏகப்பட்ட குழப்பம். சுமார் மூன்று கம்பெனிகள் அவருடன் இணைந்து படம் தயாரிக்க தயாராக இருந்தும், என்னவோ கோளாறு. பட அறிவிப்பு மட்டும் தள்ளி தள்ளி போய் கொண்டேயிருக்கிறது. ரஜினி, அஜீத், ஜெயம்ரவி என்று தொடர்ந்த அந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. (இதுவாவது முடிவா இருக்குமா?)
விஜய் சேதுபதி கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்கப் போகிறாராம். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறதாம். இந்த நிறுவனத்திற்கும் விஜய் சேதுபதிக்கும் நடந்த ஒரு உரையாடல்தான் இப்போது கோடம்பாக்கத்தில் வைரல்! சேதுபதியிடம் பேசிய நிறுவனம், “எங்க கம்பெனி பெரிய கம்பெனி. அதுக்காக நீங்க எத்தனை கோடி குறைச்சிக்கிறீங்க?” என்றொரு சுத்தியலை போட, அதையே திருப்பிப் போட்டாராம் சேதுபதி.
“நான் கஷ்டப்படும் போது எனக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்தவங்களுக்காக நான் ஓ.சி யில் கூட படம் நடிச்சுக் கொடுத்திருக்கேன். என் கஷ்ட நேரத்தில் டிராவல் பண்ணாத உங்களுக்கு நான் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?” என்றாராம். திக் திகிலடித்த ஏஜிஎஸ்சுக்கு ஒரு சலுகை மட்டும் தந்திருக்கிறார் அவர். “வேணும்னா ஒண்ணு பண்ணலாம். ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் மாதிரியான இயக்குனர்களை கொடுங்க. நான் ஒரு கோடி சம்பளத்துக்கு கூட தயார்” என்று அவர் கூற, அதற்கப்புறம்தான் உள்ளே வந்திருக்கிறார் கே.வி.
எது எப்படியோ… விஜய் சேதுபதியின் கம்பெனி தேர்வும், இயக்குனர் தேர்வும் அவரை இன்னும் உயர உயர கொண்டு போகும்!
பன்ச் வசனம் பறக்குது ஓவ்வொரு நேர்காணலில்..