பெண்கள் சரக்கடிக்கலாம், தவறில்லை! கிறுகிறுக்க வைத்த அரிமா நம்பி டைரக்டர்
அண்மையில் வெளிவந்த ‘அரிமாநம்பி’ படத்தில் நாயகி ப்ரியா ஆனந்த் நன்றாக ‘சரக்கடிப்பதாக’ காட்டுகிறார்கள். அதுவும் வோட்காவை ராவாக அடிக்கிறார் அவர். ‘இப்படியெல்லாம் காட்சிகள் வைத்திருக்கிறீர்களே, இது நியாயமா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது அப்படத்தின் இயக்குனர் ஆனந்த்திடம். இவர் ஏ.ஆர்.முருகதாசிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
கடந்த சில தினங்களுக்கு முன் திரைக்கு வந்து ஜம்மென்று ஓடிக் கொண்டிருக்கிறது அரிமா நம்பி. விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ப்ரியா ஆனந்த். படம் த்ரில்லர் வகையை சேர்ந்தது. இந்த படத்தில் துவக்க காட்சிகளில் ஒரு குடும்ப குத்துவிளக்கு போல வரும் ப்ரியா ஆனந்தை பார்த்து, ஒரு பாரில் சரக்கடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபு, அவ தமிழ் பொண்ணுடா என்கிறார். அடுத்தடுத்த சில நிமிடங்களில் அந்த தமிழ் பொண்ணு சரக்கை ராவாக உள்ளே தள்ளுவதை பார்த்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் படம் சரக்கடித்த குதிரை போல வேகமாகவும் விறுவிறுப்பாகவும் ஓடினாலும், இந்த சரக்கு காட்சி மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது பத்திரிகையாளர்களுக்கு.
படம் வெளியான அதே நாள் இரவு பிரஸ்சை மீட் பண்ணினார் டைரக்டர் ஆனந்த். விடுவார்களா? இந்த சரக்கடிக்கிற காட்சியை குறிப்பிட்டு, ஒரு தமிழ் பொண்ணு இப்படி குடிக்கிற மாதிரி சீன் வைக்கணுமா என்றார்கள். அதற்கு ஆனந்த் சொன்ன பதில்தான் ஒரே கிறுகிறு…
ஆணுக்கு பெண் சமம்னு சொல்றோம். எழுதுறோம். ஆனால் நிஜத்தில் சமமாக இருக்க அனுமதிக்க மாட்டேங்குறோம். அவங்களும் சமம்தான்னு சொல்றதுக்காகதான் அப்படியொரு காட்சியை வைத்தேன் என்றார் அவர். அந்த பதினொரு அடுக்கு பில்டிங்கின் மேல் தளத்தில்தான் இந்த பிரஸ்மீட் நடந்தது. அதற்கப்புறம் கேள்விகள் கேட்காமல் அமைதியாகிவிட்டது பிரஸ். எதுக்கு வம்புன்னுதான்!