ஐயோ… இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது! தப்பித்து ஓடிய லட்சுமிமேனன்!

கண்ணில் புரை விழுந்து ஆபரேஷன் கண்டிஷனில் இருந்தாலும் கூட, நீங்கள் லட்சுமிமேனனை ரசிக்கலாம். காரணம்… அந்த இன்னசென்ஸ்! முகத்தில் போலிக்கு இடமேயில்லை. மிருதன் படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்த அவரை, இப்படி மடக்குவார்கள் என்று அவரே நினைத்திருக்கப் போவதில்லை. பேச்சு மெல்ல, சொந்த குரலில் டப்பிங் பேசுவது பற்றி திரும்பியது.

“நல்லா அழகா பாடுறீங்க… குரல் கூட காதுக்கு கஷ்டம் தர்ற மாதிரியில்ல. அப்படியிருக்கும் போது உங்க படத்துக்கெல்லாம் வேற யாரோதானே டப்பிங் கொடுங்குறாங்க. நீங்களே பேசலாமே லட்சுமி?” இதுதான் கேள்வி. “எனக்கும் ஆசையாதான் இருக்கு. ஆனால் யாரும் நம்பி தர மாட்டேங்குறாங்களே. ஆனால் எனக்காக பேசுறவங்க நான் பேசுவது போலவே பேசுறாங்க. சந்தோஷமா இருக்கு” என்று பதில் சொல்லி முடித்தார். அதற்கப்புறம்தான் ஏழரை ஸ்டார்ட்!

“ஸ்ருதிஹாசனே அந்த அண்டங்காக்கா குரலை வச்சுகிட்டு டப்பிங் பேசும்போது, நீங்க பேசுறதுக்கு என்ன? தாரளமா பேசலாமே? வேணும்னா நாங்க ரெகமென்ட் பண்ணவா?” என்று பிரஸ் பக்கத்திலிருந்து குரல் வர, ஐயோ சாமீ ஆனார் லட்சுமிமேனன். “நோ காமெண்ட்ஸ்… நோ காமென்ட்ஸ்… இப்படியொரு கேள்வியை நான் காதால கேட்டேன்னு கூட எழுதிடாதீங்க. ப்ளீஸ்” என்றார் கைகள் இரண்டையும் கூப்பியபடி.

எழுதாம விட்டால் ஏழரைக்கு ஏது மரியாதை?

1 Comment
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    வாய்ல வெடிகுண்டு வீசுனது நீனா இல்ல அந்த பயில்வானா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Virumaandikum Sivanaandikum Movie Stills

Close