உதயநிதியுடன் ஜோடி சேரும் லட்சுமிமேனன்!

ஸ்கூல் பொண்ணு லட்சுமிமேனனை ‘கூல்’ பொண்ணு என்று வர்ணிக்கிறார்கள் ஹீரோக்கள். பச்சப்புள்ள சிரிப்புக்காரியாக இருந்தாலும், சிலரது பதுங்குக்குழியில் விழுந்து விடாமல் எச்சரிக்கையாக தப்பித்துவிடுகிற பெண் என்பதாலும் இவர் மீது தனி கரிசனம் காட்டுகிறது கோடம்பாக்கம். எல்லாவற்றையும் விட முக்கியமானது சென்ட்டிமென்ட்! ஆரம்பித்த முதல் படத்திலிருந்து அண்மையில் வந்த கடைசி படம் வரைக்கும் இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட் ஹிட் ஹிட்…

இந்த ஒரு விஷயத்திற்காகவே இவரை வளைத்து வளைத்து கால்ஷீட் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள் இங்கே. ஆனால் மார்க்கெட்டில் மரியாதையில்லாத எந்த ஹீரோக்களுடனும் சேர்வதாக இல்லை லட்சுமிமேனன். இந்த நேரத்தில் இவரது அடுத்த நாயகன், உதயநிதி ஸ்டாலின் என்கிறது சில நம்பத்தகுந்த தகவல்கள். இது கதிர்வேலன் காதல் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் உதயநிதி. அதில் ஒரு படத்தில்தான் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் லட்சுமிமேனன்.

இந்த படத்தை இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனே இயக்கப் போகிறார் என்பது கூடுதல் தகவல். ஒரு தோல்விப்படத்திற்கு பின் மீண்டும் அவருக்கு படம் தருவது உலக மகா அதிர்ஷ்டமாச்சே? எப்படி வாய்த்தது பிரபாகரனுக்கு? முந்தைய படத்தில் சில தலையீடுகள் இருந்ததாகவும் அதனால்தான் படம் தடுமாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த முறை அவரை முழு சுதந்திரத்தோடு களம் இறக்கப் போகிறாராம் உதயநிதி. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவது ஹாரிஸ் இல்லை. இமான் அல்லது அனிருத்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தீர்ந்தது குழப்பம்! சேர்ந்தனர் மீண்டும்!

கவுதம்மேனன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இதில் அஜீத் ஹீரோவாக நடிக்கிறார். அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார் என்கிற செய்தி உலகம் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கிற விஷயம்தான்....

Close