சிவனேன்னுதானே இருக்கேன், அப்புறம் ஏன்?! லட்சுமிமேனனை அதிர வைத்த ஐயோ பாவிகள்

வெளியூர்ல திருவிழான்னாலும் வீட்டுக்குள்ள மோளம் அடிக்கறதை விட மாட்டாங்க போலிருக்கு. சில தினங்களுக்கு முன் ஆரம்பித்துவிட்டது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தின் ஷுட்டிங். அவருக்கு தங்கையாக நடிக்கும் லட்சுமிமேனனின் போர்ஷன்கள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று தமிழகத்தில் ப்ளஸ்டூ பரிட்சை முடிவுகள் வெளியாகின. யார் யாருக்கு வெற்றி? யாருக்கெல்லாம் முதல் மார்க்? எங்கெல்லாம் தற்கொலைகள்? என்று கவனித்து வந்த தமிழகத்தை திடீரென்று ஒரு செய்தி தாக்கியது.

‘நம்ம லட்சுமிமேனன் கணக்குல பெயிலாம்ல?’ என்று கெக்கெக்கெ சிரிப்புடன் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்குகளில் அந்த கேள்விகள் பறக்க, இன்னும் கேரளாவில் ரிசல்ட்டே வர்ல மாமூ என்று பதிலளித்தார்கள் சிலர்.

போற போக்குல இப்படி விஷ நகங்களால் பிராண்டிவிட்டு போகிறவர்களின் இம்சை, அப்படியே ஷுட்டிங்கிலிருந்த லட்சுமிமேனனுக்கும் போய் சேர்ந்தது. இதுகெல்லாம் மறுப்பு சொல்லிட்டு இருக்கணுமா என்று நினைத்தாராம் முதலில். அப்புறம், இன்னும் ரிசல்ட்டே வரலேன்னு சொல்லிடுங்க என்று அருகிலிருந்தவர்கள் கேட்டுக் கொள்ள, அப்படியே பதிலளித்திருக்கிறார் அவர்.

அவங்கவங்க அக்கா தங்கச்சிங்க எவ்ளோ மார்க்குன்னு தெரிஞ்சுகறதுக்கு காட்டுற அக்கறையை விட நான் பெயிலாயிட்டேன்னு சொல்லி சிரிக்கறதுல அவ்வளவு ஆசைன்னா சிரிச்சுட்டு போவட்டுமே என்றாராம் கூடவே.

லட்சுமிமேனன் பெயிலா கூட ஆகட்டும்… சினிமாவுல பாஸ் பண்ணினா போதும். அல்லது அவர் நடிக்கும் சினிமா பாஸ் ஆனால் போதும்!

Read previous post:
ஹைக்கூ படத்தில் சூர்யா

Close