வெங்கட்பிரபுக்கு ஒரு பிரேம்ஜி! லாரன்சுக்கு ஒரு எல்வின்! தாங்கமுடியாத தம்பிகள் பாசம்

இப்போது லாரன்ஸ் காட்டில்தான் ‘பேய்’ மழை! காஞ்சனா 2 படத்தின் கலெக்ஷன் 100 கோடியை எட்டியிருக்கிறது. அட… அது கூட போதாது என்று இன்னும் பல தியேட்டர்களில் இந்த பேயை கட்டிக் கொண்டு மாரடிக்கிறார்கள். இந்த வசூல் மழையில் நனைந்த விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் அடுத்து எப்ப சார் உங்க படம் என்று லாரன்ஸ்சை நச்சரித்து வருவது தனிக்கதை. இது ஒருபுறமிருக்க, தெலுங்கில் அவர் பிரபல ஹீரோ பிரபாஸ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கினாரல்லவா? அந்த படம் நஷ்டமாகி சுமார் ஐந்து கோடி ரூபாய் கடனை லாரன்ஸ் தலையில் கட்டிவிட்டார்கள் அங்கே. அதையும் அடைத்துவிட்டாராம் இப்போது. அண்டை மாநிலங்களில் மட்டுமல்ல, சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலும் பிய்த்துக் கொண்டு ஒடி வரும் காஞ்சனாவில் ஒரு விஷயத்தை மட்டும் உற்று கவனித்தவர்களுக்கு முன்பே புரிந்திருக்கும்…. விரைவில் ஒரு வெடி இருக்கப் போகிறதென்று.

ஒரு பாடலுக்கு லாரன்சுடன் ஆடியிருந்தார் அவரது தம்பி எல்வின். பாடல் ஓடும்போதே இவர் ராகவா லாரன்சின் தம்பி என்று திரையிலேயே கார்டு போடுவார்கள். அந்த தம்பியைதான் இப்போது தனி ஹீரோ ஆக்கப் போகிறாராம் இந்த பாசக்கார அண்ணன்.

இந்த எல்வின் ஹீரோ மெட்டீரியலா என்றால், உலகம் தலையில் அடித்துக் கொள்ளும். ஆனால் நடனம், பைட், சிக்ஸ்பேக் என்று சகல முன்னேற்பாடுகளுடனும் களத்தில் குதிக்கிறார் எல்வின். வெங்கட்பிரபுவுக்கு ஒரு பிரேம்ஜி வாய்த்தது போல அல்லாமல், லாரன்ஸ் பெயரை காப்பாற்றினால் ரசிகர்கள் தானாக ‘வெல்கம்’ சொல்லப் போறாங்க? அப்புறமென்ன… அட்றா மேளத்தை… கட்றா தாலியை!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பொதுக்குழுவில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்...

Close