லாரன்ஸ் நயன்தாரான்னே போடுங்க! தாராளம் காட்டிய நயன்!
பொறுப்பிலிருக்கிற அரசு அதிகாரிகளுக்குதான் ‘புரோட்டோக்கால்’ என்றில்லை. பொறுப்பா இருக்கிற பசங்களையே போற போக்குல தறுதலையாக்கிட்டு போற நடிகர் நடிகைகளுக்கும் இருக்குப்பா புரோட்டோக்கால்! அதிலும் இரண்டு நடிகைகள் ஓரிடத்தில் இருந்தால், அங்கு நடக்கிற ஈகோ சலசலப்புகள் இருக்கிறதே… அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரிந்த அவஸ்தை. ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரே நேரத்தில் வந்தால் கூட, யார் முதல்ல காரை விட்டு இறங்குறாங்க என்பதில் கூட ஈகோ பார்க்கும் கோக்கு மாக்கு உலகம் இந்த சினிமாவுலகம்.
இங்குதான் லாரன்சையும், நயன்தாராவையும் ஒரே படத்தில் ஜோடியாக்கி அழகு பார்த்துவிடுவது என்று களத்தில் இறங்கியிருக்கிறார் ஒரு இயக்குனர். அவர் நினைத்த மாதிரியே இருவருக்கும் கதை பிடித்துவிட்டது. “என்னோட நடிக்க அவங்க தயாரா இருக்காங்களான்னு முதல்ல கேட்டுக்கோங்க” என்று கூறி விட்டாராம் லாரன்ஸ். இந்த விஷயத்தை அப்படியே நயன்தாரா காதுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். “அவருக்கென்ன! லாரன்ஸ் நயன்தாரா இணைந்து நடிக்கும்னு தலைப்புலயே கிரடிட் கொடுங்க. நான் அதை பெருமையா எடுத்துப்பேன்” என்றாராம் நயன்.
வயசு எம்புட்டு ஏறினாலும் நம்பர் ஒன் பொசிஷனில் நயன்தாராதான் இருக்கிறார். அந்த பொசிஷனுக்குரிய புரோட்டோகாலுக்கு தயாராகவே இருக்கிறது உலகம்!