காஷ்மீரின் கவலை போக்க ஒலித்த சினிமா குரல்கள்

கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரின் துயர் துடைக்க ‘நாங்கள் இருக்கிறோம் – காஷ்மீரின் துயர் துடைக்க” என்ற திட்டத்தை துவக்கியது ஈமா என்று அழைக்கப்படும் ஈவன்ட் அண்ட் என்டர்டெய்ன்மென்ட் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் அமைப்பு. காஷ்மீரின் கவலை போக்க, நடைபெற்ற இந்த சிறப்பு கலைநிகழ்ச்சி சென்னை ஸ்ரீ முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கில் வண்ணமயமான இசைவிழா நடைபெற்றது. 
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், பாடகியுமான ஆண்ட்ரியா  இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தல் பாடல்களை பாடினார். திரையில் கவர்ச்சியில் அசத்தும் நடிகை லட்சுமி ராயும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். அவர் மட்டுமல்லாது,  பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், ஹரிச்சரண், ராகுல், ரஞ்சித், திருச்சுசூர் சகோதரர்கள், பாடகிகள் சுசித்ரா, சக்திஸ்ரீ கோபாலன், நிகிதா, திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை பொழுதை, இசைமாலையாக மாற்றினார்கள். வெறும் பாடல் மட்டுமல்லாது ஆட்டமும் களைகட்டியது. ஜான் பிரிட்டோ மற்றும் ரமாஸ் குழுவினரின் இளமை துள்ளும் நடனமும் பார்வையாளர்களை கட்டிப் போட்டது.
 
பங்கேற்பாளர்கள் மட்டுமல்ல நட்சத்திரங்கள், பார்வையாளர்களும் நட்சத்திரங்களே என்று கூறுமளவுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். நடிகர் மகேந்திரன், பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன், அசோக், ஷபீர், அமித்ஷ், ஆதித், நடிகரும் இயக்குனருமான ஸ்ரீPநாத், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், பாடகி பத்மலதா, முருகவேணி, பெண் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், ரேஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
 
சென்னையில் கலைநிகழ்ச்சி நடைபெற்ற அதேவேளையில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் இதேபோன்று கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் தனித்தன்மை. இதனை பிரதிபலிக்கும் விதமாகத் தான், ஒரே நேரத்தில் பல இடங்களில் விதவிதமான கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது ஈவன்ட் அண்ட் என்டர்டெய்ன்மென்ட் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் அமைப்பு. 
 
இதுகுறித்து பேசிய ஈவன்ட் அண்ட் என்டர்டெய்ன்மென்ட் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் கனேரிவாலா, இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதியானது காஷ்மீரின் வெள்ள நிவாரண பணிகளுக்கு வழங்கப்படும் என்றார். மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மற்றும் விசாகபட்டிணத்திற்கும் இந்நிதியின் ஒருபகுதி வழங்கப்படும் என்றார்.
Largest Galaxy of stars on-stage for Hum Hain – Umeed E Kashmir.

EEMA (Event and Entertainment Management Association) the apex body for event managers along with the entertainment fraternity decided to show solidarity conducted simultaneous events in Delhi, Mumbai, Hyderabad and our very own Chennai, to raise funds for the Kashmir Flood situation.

At the show held at Sir Mutha Venkatasubarao Concert hall Concert Hall, said Siddharth Ganeriwala, Convenor, Hum Hai, Chennai

The idea of creating multiple simultaneous live events showcases the strength, diversity and unity of our country; it also demonstrates the growing strength of the live and event management industry across the country. Bringing the country together, is at the core of the initiative that we are building.

HUM HAIN: Umeed-e-Kashmir is working alongside several NGOs, Government bodies, celebrities and civilians to give the cause a unified voice.

As human beings and as Indians we need to do all that we can to help our countrymen in need. The plight of the people of Jammu & Kashmir is a matter of concern and the floods have only made it worse. All that we do simply won’t be enough to meet the various challenges facing the people; but every drop counts.

As a run-up to this event, Assam and Vizag too were devastated by the floods and they have been included for relief and rehabilitation.

Srininivas, Andrea Jeremiah, Suchitra, Haricharan, Rahul, Sunitha Sarathy, Ranjith, Sakthisree, Nikita, Trichur Brothers, MC’s Vijay Adiraj, Divya, and the super talented Lakshmi Rai, supported by choreography of John Britto& Ramaash, came together on one platform to sing, dance,entertain to raise funds.

The evening also saw the presence of Actor Mahendran, Ashok, Power Star Srinivasan, Shabeer, Amitaash, Adith, Actor cum Director Srinath, Music Director Siddharth Vipin, Singer Padmalatha, Singer Murugaveni, Director Lakshmi Ramakrishnan, Reshmi Menon,

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சுட சுட கத்தி ட்ரெய்லர்

http://youtu.be/bMf0IyzyKt4

Close