சொந்தப் பணத்தில் சூனியமா? ரஜினி பற்றி ஒரு புதுத்தகவல்!

இந்த நிமிஷம் வரைக்கும் மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது ஒரு விஷயத்தைதான். ‘பிஜேபி தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறது. அதற்கு கொல்லை புற வழியை திறந்து வைத்திருக்கிறார் ரஜினி’ என்பதுதான் அது. ரஜினியை வெறும் கையால் இயக்க முடியாதே? அதற்கான செட்டில்மென்ட் நிச்சயம் நடக்கும் என்கிற சந்தேகமும், யூகமும் பலமாக வீசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் அப்படியொரு தகவல்.

ரஜினி சொந்தக்கட்சி ஆரம்பிக்க முடிவெடுத்திருக்கிறார் அல்லவா? அதற்கான பொருளாதார பேக்ரவுண்ட் எதுவும் பி.ஜே.பியிடமிருந்து வரவில்லையாம். மாறாக ரஜினியே பெரும் தொழிலதிபர் ஒருவரிடம் வட்டிக்கு பணம் கேட்டுள்ளாராம். கேட்கப்பட்டிருக்கும் தொகை பெரும் தொகையாக இருப்பதாலும், கேட்கிற பணம் சினிமாவுக்கல்ல, அரசியலுக்கு என்பதாலும் எதிர்முனை தெளிவான ஒரு பதிலை சொல்லாமல் குழப்பிக் கொண்டிருக்கிறதாம்.

எல்லாம் கை கூடி வந்தால், நாளைக்கே கட்சி பெயர், கொள்கை, மாநாடு எல்லாம் ரெடி. அதுவே கைக்கு வராமல் போனால், ஆண்டவன் என்றைக்கு சொல்கிறானோ… அன்றுதான் இதெல்லாம் நடக்கும் என்கிறார்கள்.

நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் சதுரங்கத்தில் ரஜினி கடன் வாங்கி இறைக்க தயாராக இருக்கும் இந்தப் பணம் லாபத்தில் நஷ்டமா? அல்லது நஷ்டத்தில் நஷ்டமா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

Read previous post:
அன்புமணி ஐயா… அவ்வளவு நேர்மையானவரா அஜீத்?

  https://www.youtube.com/watch?v=rq3E9qunGOg

Close