மோடி பதவியேற்பு விழாவில் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினி?

மோடி பங்கேற்பு விழாவில் ரஜினி கலந்து கொள்ளதான் ஆசை கொண்டிருந்தார். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே வந்திருந்து அந்த ஆசையில் ஒரு பொக்லைன் மண்ணை அள்ளிப் போட்டார். அவர் விழாவுக்கு போகாவிட்டாலும் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லம் முன்பு திரண்ட ஈழ தமிழர் நலன் பேசும் மாணவர் குழு ஒன்று கண்டன குரல் எழுப்பியது.

தமிழகத்தில் ராஜபக்சேவின் கொடூர செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைவர்களான விஜயகாந்த், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் ராஜபக்சேவின் வருகை தொடர்பாக லேசாக ஒத்தடம் கொடுப்பதை போல ஒரு அறிக்கையை விட்டு விட்டு ஒதுங்கிக் கொண்டனர். ஆனால் இந்த விஷயத்தில் மோடிக்கு காபி விருந்தளித்த ரஜினியை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குவது நீதியா? நியாயமா? போன்ற குரல்கள் இங்கு எழுந்தன. ஆனால்?

தன்னை மதித்து அழைப்பு அனுப்பிய மோடிக்கு ஏன் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற பதிலை சொல்ல வேண்டுமல்லவா? அதனால் லிங்கா படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை என்று தகவல் அனுப்பினாராம் ரஜினி.

அப்படியிருந்தும் மனம் கேட்காத ரஜினி, தனது மனைவி லதாவையும் மகள் ஐஸ்வர்யாவையும் அனுப்பி வைத்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. 26 ந் தேதி பகல் விமானத்தில் கிளம்பிய இருவரும், அந்த மாபெரும் மண்டபத்தில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்தார்களாம்.

மீடியாவின் கண்களில் இவர்கள் படாமலிருந்ததுதான் ஆச்சர்யம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி மகளை வம்புக்கு இழுத்த சிம்பு

ட்விட்டர் இருக்கும் வரை சிம்புவின் புகழ் ஓயவே ஓயாது! யாராவது ஒதுங்கிப் போனால் கூட சட்டையை பிடித்து இழுத்து, நான் இங்கதான் இருக்கேன் தெரியுமா என்பதை போலவே...

Close