பலூன் வெடிச்சா ரஜினி என்ன பண்ணுவாராம்? அவருக்கும் வக்கீல் நோட்டீஸ்!
காவேரியில் தண்ணீர் வராததில் ஆரம்பித்து, கடைசி வீட்டு மாடு ‘சினை’ பிடிக்காத சோகம் வரைக்கும் ரஜினி தலையை உருட்டாமல் விடுவதில்லை யாரும்! நல்லவேளை… காஷ்மீர் பிரச்சனையில் ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை என்கிற ஒரு கேள்வி மட்டும்தான் இன்னும் எழவில்லை. (அட… இத வேற ஞாபகப்படுத்தியாச்சா?) இப்படியொரு நிலையில்தான் அந்த வழக்கு. அது தொடர்பாக ரஜினிக்கு வக்கீல் நோட்டீஸ்.
வேறொன்றுமில்லை. கபாலி ரிலீஸ் சமயத்தில் திருச்சியில் அமைந்துள்ள ரம்பா தியேட்டரில் மக்களை கவரும் விதத்தில் ஒரு ராட்சத பலூனை கட்டினார்களாம். மூன்று நாட்கள் பறந்த அந்த பலூன், அதற்கப்புறம் இறக்கப்பட்டது. இறக்கும்போது அந்த பலூன் வெடித்ததில் பணியாளர்கள் நால்வருக்கு படுகாயம். போலீஸ் விசாரணை என்று அடுத்த ஸ்டெப்பை நோக்கிப் போய்விட்டது விவகாரம். அடிபட்ட நால்வருக்கும் மருத்துவ செலவை யார் செய்வது என்பதில்தான் பிரச்சனையே? தியேட்டர் நிர்வாகம்தான் செய்ய வேண்டும் என்று சிலரும், பலூனை கட்ட ஏற்பாடு செய்த ரஜினி ரசிகர்கள்தான் செலவு செய்ய வேண்டும் என்று சிலரும், அந்த பலூன் கம்பெனிதான்யா பொறுப்பேத்துக்கணும் என்று சிலரும் பஞ்சாயத்துப் பண்ணிக் கொண்டிருக்க, வழக்கில் தலையிட்ட வக்கீல், நேரடியாக ரஜினிக்கே நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.
செக்கு சுத்துறது ஒரு ஊர்ல, எண்ணெய் வடியறது இன்னொரு ஊர்லயா? வௌங்கிரும்யா…
To listen audio click below :-