கிழவனை கட்டிக் கொள்ளும் லட்சுமிராய்?

அதென்னவோ தெரியவில்லை. இப்போதெல்லாம் லட்சுமிராய் முகம் அதிகம் தென்பட ஆரம்பித்திருக்கிறது பட விழாக்களில். இரும்புக்குதிரை, அரண்மனை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்று அவர் நடிக்கும் படங்கள் வரிசையாக வந்து கொண்டிருப்பதால் கூட அவர் சென்னையில் டேரா போட்டிருக்கலாம். லட்சுமிராயின் லேட்டஸ்ட் தரிசனம் ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா! படத்தின் பிரஸ்மீட்டில்’ (நம்புங்க… இது சினிமா தலைப்புதான்) லாரன்ஸ் தயாரித்து இயக்கி நடிக்கும் முனி பார்ட் 3 எப்போது ரிலீஸ்? தெரியாது. ஆனால் இந்த புதுப்படத்தின் அறிவிப்பை, தனது கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டான லட்சுமிராய் முன்னிலையில் வெளியிட்டார் அவர்.

‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ என்பது வெறும் படம் மட்டுமல்ல, தமிழ்சினிமாக்காரர்களுக்கு லாரன்ஸ் மூலம் சொல்லப்பட்டிருக்கும் ஒரு ஐடியா! எதிர்காலத்தில் இதுபோல ஏராளமான படங்கள் வந்து பிளேடு, மொக்கை, அறுவை போன்ற ஆயுதங்களிலிருந்து ரசிகர்களை காப்பாற்றக் கூடும். முதல் பாதியில் ஒரு சினிமா. இரண்டாவது பாதியில் இன்னொரு சினிமா. வேறு வேறு நடிகர்கள். வேறு வேறு கதைகள் என்று புது முயற்சியை செய்திருக்கிறார் லாரன்ஸ். டிக்கெட் விலை? ஒன்றேதானாம்…!

ஒரு படத்திற்குள் கிழவன், கருப்புக்குதிரை என்ற இரண்டு கதையை ஓட்டவிருக்கும் லாரன்ஸ் ஒரு கதைக்கு லட்சுமிராயையும், இன்னொரு கதைக்கு ஆன்ட்ரியாவையும் ஃபிக்ஸ் பண்ணி வைத்திருக்கிறாராம். ‘ரெண்டு பேர்ல யாருக்கு சம்பளம் அதிகம்?’ என்றொரு விவகாரமான கேள்வியை வீசி முதல் வில்லங்கத்தை ஆரம்பித்தது பிரஸ். ‘இப்பதான் லட்சுமிராயை பிக்ஸ் பண்ணியிருக்கேன். இனிமேதான் ஆன்ட்ரியாகிட்ட பேசணும். அதுக்குள்ள பிரச்சனையை உண்டாக்கிடாதீங்க’ என்ற லாரன்ஸ் இந்த படத்தின் மூலம் இன்னொரு புதுமையை செய்திருக்கிறார். இதுவரை வெறும் திரைப்பட பாடலாசிரியராக மட்டும் கருதப்பட்ட விவேகாவை, வசனகர்த்தாவாகவும் மாற்றியிருக்கிறார். யெஸ்… மேற்படி படங்கள் இரண்டின் வசனத்தையும் விவேகாவே எழுதுகிறாராம்.

‘கிழவன் ’ படத்தில் ஹீரோயினாக நடிக்கும் லட்சுமிராயிடம், ‘என்னங்க… நீங்க கிழவனை கட்டிகிட்டு வேதனைப்படுறதுதான் கதையா?’ என்றொரு கேள்வியை போட்டால், ‘ஐயய்யோ இல்லைங்க’ என்று அலறினார். (விட்டா ரூட்டை மாற்றி விட்ருவாங்களோ என்கிற அச்சம்தான்) நடுவில் புகுந்த லாரன்ஸ், நீங்க நினைக்கிற மாதிரியில்ல. ஒரு கிழவன் கதை சொல்ல ஆரம்பிக்கிறான். அந்த கிழவனா நானே நடிக்கிறேன். அப்படியே அது பிளாஷ்பேக்கா விரியும். கதை முடியும் போது கிழவனை மீண்டும் காட்டுவோம். அவ்ளோதான்’ என்றார்.

நல்லவேளை… கதை சொல்லப்போவது லாரன்ஸ் என்ற கிழவன். லட்சுமிராய் என்ற கிழவியல்ல. கடவுளே… நிம்மதி!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மஹாபலிபுரம் படத்தின் பின்னணி இதுதான்!

‘காத்து வாங்க போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்’ கதைதான் இது. வேறொன்றுமில்லை, நண்பர் கூட்டம் ஒள்று அடிக்கடி மஹாபலிபுரம் போவார்களாம். ‘கிரிக்கெட் விளையாடதான்’ என்கிறார்கள் அவர்கள்....

Close