ஏரியாவே காலியா கிடக்கு! எதுக்கும் மெர்க்குரிய விட்டுப் பார்ப்போம்!

‘ஏம்ப்பா… வெள்ளையா துணிய கட்டி, அதுல பொம்மையெல்லாம் ஓட விடுவாய்ங்களே… அதும் பேரென்ன?’ என்று கேட்டாலும் ஆச்சர்யமில்லை. அந்தளவுக்கு கடந்த ஒன்றரை மாதமாக, தியேட்டர்னா என்ன? டிக்கெட்டுன்னா என்ன? படம்னா என்ன? பப்ஸ்சுன்னா என்ன? என்பதையே மறந்து தொலைத்துவிட்டது தமிழ் இனம்.

இந்த நேரத்தில் ஸ்டிரைக் முடிந்து தியேட்டருக்கு வருகிற படம் என்னென்ன வயிற்று வலியை சந்திக்குமோ, அந்த கம்பவுன்டருக்கே வெளிச்சம்! ‘என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா?’ என்று முதலில் அனுப்பி வைக்க ஒரு முத்துக்காளை வேணுமே? அப்படி வந்து சிக்கியதுதான் மெர்க்குரி படம்.

நன்றாக ஒற்றுமையுடன் போய் கொண்டிருந்த தமிழ்சினிமா வேலை நிறுத்தத்தை, தனி ஒரு ஆளாக வந்து ஷேக் பண்ணப் பார்த்தார் கார்த்திக் சுப்புராஜ். அவரது படம்தான் மெர்க்குரி. அவரே தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரபுதேவா நடித்திருக்கிறார். வேறு மொழிகளில் திட்டமிட்டபடி படத்தை வெளியிட்டுவிட்ட கார்த்திக் சுப்புராஜுக்கு, தமிழில் தடையை மீறி விட்டுப்பார்த்தால் என்ன என்று தோன்றியது. இதன் பின்னணியில் ரஜினி இருந்தார் என்றும் ஒரு தகவல் உண்டு.

இதில் துணுக்குற்ற சங்கம், சுப்புராஜை போனில் அழைத்து திட்டிய கதையெல்லாம் ஓல்டு கதை. அதற்கப்புறம் தனது முந்திரிக்கொட்டை அறிவிப்பை வாபஸ் வாங்கிக் கொண்டார் அவர். இப்போது ஸ்டிரைக் முடிந்தது. இந்த வாரம் எந்தெந்த படங்கள் திரைக்கு வரும்? என்று தயாரிப்பாளர் சங்கம் லிஸ்ட் போட்ட போது, முதலில் மெர்க்குரிக்குதான் வாய்ப்பு கொடுக்கணும். நமக்காக அவ்வளவு பெரிய தியாகத்தை பண்ணியிருக்கார் கார்த்திக் சுப்புராஜ் என்று கூறி, மடை கட்டிவிட்டாராம் விஷால்.

இந்த மெர்க்குரியுடன் வேறு படங்கள் எதுவும் போட்டிக்கு வரவில்லை. ஏன்? நாம் முன்பே சொன்ன மாதிரி, ஜனங்கள்தான் தியேட்டர் இருக்கிற ஏரியாவை மறந்துவிட்டார்களே. இந்த நேரத்தில் ரிஸ்க் எடுக்கணுமா என்பதால்தான்.

நைசாக மெர்க்குரியை விட்டுப் பார்ப்போம். ஜனங்க பழைய படி திமுதிமுன்னு தியேட்டருக்கு வந்தால் ஓகே. வரலேன்னா, ஒரு பெரிய படத்தை இறக்கிவிட்டு ஜனங்களை தியேட்டருக்கு கொண்டுவர பழக்குவோம் என்பதுதான் விஷாலின் முடிவாக இருக்கும்.

ஆக மொத்தம், ஆடு மே…ன்னு கத்துமா? மேயாதேன்னு கத்துமா? நாளைக்கு ஒரு நாள் பொறுத்தா தெரிஞ்சுட்டு போவுது?

1 Comment
  1. Prakash says

    Karthik Subrajmost selfish person. Look at his tweets.
    We were not allowed, not even Hindi version…

    Industry people say Rajini said yes go a head and release.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு! இனி 234 தொகுதியிலேயும் வெற்றிதான் போங்க!

Close