ரஜினி, கவுதம், ஷங்கர், அப்புறம் டாப்.. டாப்..? தமிழ்சினிமாவில் ‘லைக்கா ’ பாய்ச்சல்!

கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்தை உண்டு இல்லை என்றாக்கிய சமூக போராளிகளுக்கெல்லாம், கடைசி நிமிஷம் வரைக்கும் டென்ஷன். படத்தை வரவிடக்கூடாது என்கிற அவர்களது ஆசை, கடைசியில் நிராசையாகிப் போனது வேறு விஷயம். ஆனால் தமிழ் படவுலகத்தில் ஒரு படத்திற்கு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தாலேயே பிரச்சனை வந்தது இதுவே முதல் முறை.

லைக்கா இந்த படத்தை தயாரிச்சிருக்க கூடாது. தயாரிச்சிருச்சு…. போகட்டும். லைக்கான்னு பேர் இல்லாமல் கத்தி வரட்டும் என்றார்கள். அதற்கப்புறம் தனது நிறுவன பெயரே இல்லாமல் படத்தை வெளியிட்டார் லைக்கா நிறுவன தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா.

காலம் மாறிவிட்டது. சகல பாதுகாப்புகளுடனும் மீண்டும் களமிரங்கியிருக்கிறது லைக்கா. இந்த முறை ரஜினி படத்தை தயாரிப்பதுடன், வேறு பல முன்னணி ஹீரோக்களையும் இயக்குனர்களையும் கொண்டு முன்னிலும் வேகமான பாய்ச்சலுடன் தமிழ்சினிமாவை ஆக்ரமிக்கப் போகிறார்கள் லைக்கா நிறுவனத்தினர்.

அவர்களின் முதல் பாய்ச்சல்தான் ரஜினி படம். அப்படியே இன்னொரு ரிஸ்க்கான வேலையையும் கையிலெடுத்திருக்கிறார்கள். பிரபல இயக்குனர் கவுதம்மேனன் தயாரிப்பில் ஐந்து படங்களை வரிசையாக எடுக்கப் போகிறார்களாம். முதல் பிரதி அடிப்படையில் அவருக்கு முழு பணத்தையும் செலுத்திதான் இந்த படங்களை தயாரிக்கப் போகிறார்கள்.

இந்த ஐந்து படங்களில் ஏதாவது ஒன்றில் அவர் தமிழ்நாடே விரும்பும் நடிகர்களை நடிக்க வைக்கக் கூடும். அப்படி நடந்துவிடுகிற பட்சத்திலும், ரஜினி, ஷங்கர் படங்கள் உருவாகிற பட்சத்திலும் லைக்கா நிறுவனத்தை யாராலும் டச் பண்ண முடியாது.

அதுதானே அவர்களுக்கும் வேண்டும்?

2 Comments
  1. JEBARAJ says

    ரஜினி கடவுளை போன்றவர். அந்த கடவுள் கேட்டால் மறுப்பவர் யார் ?
    தமிழகம் சிறக்க ரஜினி அவரால் மனது வைக்க வேண்டும்.

  2. Arun says

    தலைவர் ரஜினி அவர்கள் எப்படி நடித்தாலும் எங்களுக்கு ஒ.கே.
    மனித தெய்வத்தின் முகம் திரையில் வந்தாலே போதும். பரம திருப்தி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிவனேன்னுதானே இருக்கேன், அப்புறம் ஏன்?! லட்சுமிமேனனை அதிர வைத்த ஐயோ பாவிகள்

வெளியூர்ல திருவிழான்னாலும் வீட்டுக்குள்ள மோளம் அடிக்கறதை விட மாட்டாங்க போலிருக்கு. சில தினங்களுக்கு முன் ஆரம்பித்துவிட்டது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தின் ஷுட்டிங்....

Close