ஆசை அஜீத் மேல… கிடைச்சது சந்தானம்தான்!

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அகிலா கிஷோர். அந்த படம் வந்தாலும் வந்தது… தமிழ்சினிமாவுக்கு ஒரு வளர்ந்த நயன்தாரா கிடைத்துவிட்டார் என்று கொண்டாடியது மீடியா. ஏன்? ‘சற்றே Tall. அழகிலும் Doll! அசப்பில் நயன்தாரா’ என்று சட்டென கவர்ந்ததுதான்.

இப்படியெல்லாம் மீடியா போட்ட உரத்திற்கு பலனாக ஒரு ரோசா முளைக்கணுமே? ம்ஹும். முன்னணி ஹீரோக்கள் யாரும் அகிலா கிஷோரை அண்டவே விடவில்லை. வேறு வழியில்லாமல், கிடைக்காத பிரியாணிக்கு, கிடைச்ச புளியோரையே மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அவரும்.

யெஸ்… பெயர் வைக்காத ஒரு படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கிறார்.

இத்தனைக்கும் வந்த புதிதில் அவர் கொடுத்த பேட்டி என்ன தெரியுமா? என் உயரத்திற்கு அஜீத்துதான் செட் ஆவார் என்று.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தென்னங்கீற்றில் துள்ளித்திரிந்த அணில்! -கே.பாலசந்தருக்கு வைரமுத்து இரங்கல்

மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது- “இதயத்தை உலுக்கிவிட்டது இயக்குநர் சிகரத்தின் இறப்பு. பாலசந்தர் என்பது ஒருவரின் பெயரன்று, தமிழ் சினிமாவின்...

Close