அமெரிக்காவில் லிங்கா ரசிகர்களின் உற்சாகம் (வீடியோ)

தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ‘லிங்கா’ கொண்டாட்டம் ஆஹா ஓஹோதான்! அதுவும் அமெரிக்காவில் லிங்காவை கொண்டாடித் தீர்த்து விட்டார்கள் ரஜினியின் தீவிர ரசிகர்கள். சுமார் 5000 மைல் சுற்றளவில் இந்த முனையில் லிங்கா திரையிடப்பட்டபோது ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதே உற்சாகம் வேறொரு முனையிலும் அப்படியே இருந்ததாக கூறுகிறார் ஜாக் ராஜசேகர். பியூஷன் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர், லிங்காவின் அமெரிக்க விநியோகத்திலும் பெருமளவு பங்கேற்றவர்.

அதுமட்டுமல்ல, டிக்கெட் விலை 25 டாலர்களுக்கு விற்கப்பட்டதாம். நமது ஊர் பணத்திற்கு ரூபாய் 1500 மதிப்பு. இருந்தாலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் முண்டியடித்து தியேட்டருக்குள் வந்தார்களாம். கலிபோர்னியா ரஜினி பேன்ஸ் தியேட்டரில் பெரிய கேக் கொண்டு வந்து ரஜினி சார்பாக வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள். விர்ஜினியாவில் ஹேம்ப்டன் ரோட்ஸ் தமிழ்ச் சங்கம் லிங்காவின் சிறப்பு காட்சியை தமிழர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கிறது.

அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் உள்ள ஒரு திரையரகங்கத்தில் லிங்கா பார்க்க வந்த ரசிகர்களின் குஷியை இங்கு வீடியோவாக இணைத்துள்ளோம். அதையும்தான் பாருங்களேன்.

Read previous post:
அஜீத் படம் வரும்போது நம்ம படத்தையும் விட்டாலென்ன? சிவகார்த்திகேயனின் திகீர் யோசனை?

இந்த பொங்கல் வெட்டு குத்தில்தான் முடியும் போலிருக்கிறது. அஜீத்தின் என்னை அறிந்தால், ஷங்கரின் ஐ, விஷாலின் ஆம்பள, இவற்றுடன் நானும் வருவேன் என்று முண்டா தட்டுகிறாராம் சிவகார்த்திகேயன்....

Close