சிட்டி எனக்குதான்… லிங்கா வாங்கும் போட்டியில் இரண்டு விஐபிகள் கோதா!

லிங்கா ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க, ஏலத்தொகை கூடிக் கொண்டே போகிறது. பாடல்கள் வெளியிடுவதற்கு முன் ஒன்று. பாடல் வெளியீட்டுக்கு பின் ஒன்று என்று விலையேறிக் கொண்டே போன லிங்காவின் பிசினஸ் மோகம் இப்போது உச்சத்திலிருக்கிறதாம். விலை படியாமலே சென்னை சிட்டி, டி.கே என்று சொல்லப்படும் திருநெல்வேலி கன்னியாக்குமரி, மதுரை, சேலம் ஆகிய நான்கு ஏரியாக்கள் இன்னும் விற்கப்படாமலிருக்கிறதாம். எனக்குதான் உனக்குதான் என்கிற போட்டியும் நடைபெற்று வருகிறது.

சென்னையை பொறுத்தவரை லிங்காவின் வெளியீட்டு உரிமையை அபிராமி ராமநாதன் ஏழு கோடி வரைக்கும் கேட்டிருக்கிறாராம். இவர் அபிராமி தியேட்டர் உரிமையாளர். அண்ணாசாலையில் அமைந்திருக்கும் சத்யம் திரையரங்கத்தின் மேற்பார்வையாளரான முனிர் கன்னையாவும் இந்த போட்டியில் குதித்திருக்கிறார். லிங்காவுக்கு இவர் வைத்திருக்கும் விலை எட்டு கோடி. மதுரை ஏரியாவை விலை பேசிக் கொண்டிருக்கிறாராம் அன்புச்செழியன்.

இப்படி போட்டியும் வேகமுமாக போய் கொண்டிருக்கும் லிங்கா, ரசிகர்களுக்கு பி.பி.யை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு நாளும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உதவிய ரஜினி ஐ டென்ஷன் ஓவர்! எல்லாரும் ஹேப்பி அண்ணாச்சி

ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது ஐ! ‘வரும் ஆனா வராது...’ ரேஞ்சிலேயே இழுத்துக் கொண்டிருந்த ஷங்கரின் ஐ திரைப்படம் உலகம் முழுவதுமான விநியோகத்தில் 250 கோடி...

Close