லிங்கா ஷூட்டிங் பிரச்சனை ! முதல்வர் வரைக்கும் ஓடிச் சென்று மனு கொடுத்த கன்னட வெறியர்கள்

கல்லெறியணும்னு முடிவு பண்ணிட்டா அது கண்ணாடியா இருந்தால் என்ன? கடவுள் சிலையா இருந்தால் என்ன? என்கிற மனத் திமிருக்கு வந்துவிட்டார்கள் குழப்பவாதிகள். பெரும்பாலும் சினிமாவையும் சினிமாக்காரர்களையும் மட்டுமே குறி வைத்து நடக்கிறது இந்த குதறல். சண்டியர் என்ற பெயரில் கமல் நடித்தால் போராட்டம். அதுவே வேறு ஒரு ஸ்மால் நடித்தால் அந்த திசையில் எட்டிக்கூட பார்ப்பதில்லை யாரும். இப்படிதான் எல்லா விஷயத்திலும் அக்கறை காட்டி அசர வைக்கிறார்கள் நம் ஊர் அரசியல்வாதிகளும், அடங்காத விளம்பர ஆசை கொண்டவர்களும்.

இவர்களின் கதக்களிக்கு ரஜினியும் ஆளாகியிருக்கிறார் என்பதுதான் ஐயகோ தகவல். சமீபகாலமாக விஜய் மாட்டிக் கொண்டு அல்லாடுவது தனி கதை. அதிலாவது ஒரு இனப் பாசம் இருக்கிறது. இதில் என்ன இழவு இருக்கிறதென்று முதல்வர் வரைக்கும் போய் மனு கொடுக்கிறார்களோ?

’லிங்கா’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு ஷிமோகா மாவட்டத்தில் உள்ள லிங்கனமக்கி அணை அருகே நடந்து வருகிறது. நாட்டின் முக்கிய நீர்மின் உற்பத்தி மையமான அந்த அணை அருகே படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்றும், அதை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முன்பு எத்தனையோ படங்களை இதே மைசூரிலும் கர்நாடாகவிலும் எடுத்திருக்கிறார்கள் ரஜினி பட இயக்குனர்கள். அப்போதெல்லாம் இதுபோன்ற இம்சைகளை கொடுத்ததேயில்லை கர்நாடக கலவர அமைப்புகள். இப்போதுதான் முதன் முறையாக. ஏனாம்? காவிரி பிரச்சனையில் ரஜினி ஒரு வார்த்தை விட்டார் அல்லவா? அதற்காக!

இது குறித்து சித்தராமையாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, ‘ஆசியா கண்டத்திலேயே மிக குறைந்த செலவில் நீர்மின் உற்பத்தி செய்யும் பெருமை லிங்கனமக்கி அணைக்கு உள்ளது. இந்த அணையின் மீது இப்போது அனைவரின் பார்வையும் பதிந்துள்ளது. இந்த அணையின் சுற்றுப்பகுதிகளில் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை செய்யப்பட்ட இடத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “லிங்கா’ படத்தின் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்திருப்பது விவேகமற்ற செயலாகும். மாநில அரசு உடனடியாக லிங்கனமக்கி அணை அருகில் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே, அந்த இடத்தில் நடந்துள்ள படப்பிடிப்பின் ரீல்களை வசப்படுத்த வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read previous post:
பப்ளிக்கில் முத்தம்? இமானை அதிர வைத்த ப்ரியா ஆனந்த்

பாடல் வெளியீட்டு விழாக்களில், ‘நிஜமாவே இன்னைக்கு ஹீரோ இவர்தான்’ என்று இசையமைப்பாளரை பாராட்டி பேசுவது வழக்கம். ஏதோ காக்காய்க்கு சோறு வைக்கிற மாதிரியான இந்த சம்பிரதாய சாம்பிராணி...

Close