தூங்காவனம் தர்றேன்… துயரம் வேண்டாம் லிங்கு! கலகலப்பாக்கிய கமலின் முடிவு?

நாலு ரிக்டர் என்றால் தப்பித்துக் கொள்ளலாம். பத்தரை சொச்சம் ரிக்டர் என்றால் என்னாவது? உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் மைதானத்தில் திரும்பிய இடமெல்லாம் விரிசல். எல்லாவற்றுக்கும் காரணமான உத்தம வில்லன், சைலன்ட்டாக பெட்டியில் உறங்கிக் கொண்டிருக்க, உறக்கம் தொலைத்த லிங்குசாமி என்னதான் பண்ணுவார்? அவர் ரிலீஸ் செய்ய வேண்டிய படங்களில் மிக முக்கியமானது ரஜினி முருகன். இதற்கிடையில் லிங்குவை காப்பாற்றும் விதத்தில் கமல் ஒரு படம் உருவாக்கித்தர வேண்டும். அதற்கு லிங்கு முப்பது கோடி தர வேண்டும் என்று பேச்சு.

லிங்குசாமி இப்போது இருக்கிற லொட லொடப்பில் இனிமேல் கமல் ஒரு படத்தை முடிவு செய்து, அதை படமாக்கி லிங்குசாமியின் கையில் கொடுப்பதற்குள், ஏழாவது பிளாட்பாரத்திலிருந்து ரயில் கிளம்பி என்னனென்வோ நடந்திருக்கும். நமது சேவை… உடனே தேவை என்கிற ஆம்புலன்ஸ் அவசரத்தை உணராதவரும் இல்லை கமல். அதனால்?

அதனால் என்ன செய்யப் போகிறார்? தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் தூங்காவனம் படத்தை லிங்குசாமிக்கு கொடுத்துவிடப் போகிறாராம். லிங்குசாமிக்கு இனிமேல் உருவாக்கி தரப்போவதாக சொன்ன படத்திற்கு பதிலாகதான் இந்த சலுகை.

அப்படியொரு விஷயம் நடந்துவிட்டால் லிங்குவின் வழியில் கிடக்கும் முட்கள் எல்லாம் நிமிடத்தில் காலி!

Read previous post:
சிம்பு மாதிரி ஆகணும்! அறிமுகமாகும்போதே வில்லங்கமா?

மெட்ரோ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் சிரிஷ். ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பாபி சிம்ஹா இந்த படத்தின் கதையை கேட்டு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சினிமா...

Close