இவர் காதலை அவர் கெடுத்தார் அவர் காதலை இவர் கெடுத்தார்

‘ இஞ்சி மரபா ஜுஸ் இருக்கு, எடுத்துக்குறீங்களா ப்ளீஸ் ’ என்றாகிவிட்டது கடந்த வார சினிமா நிலவரம். அவ்வளவு ஹாட்!

ஒரு நடிகை பேசவில்லை என்பதற்காக சூசைட் வரைக்கும் போய்விட்டார் இன்னொரு ஹீரோ. இப்போது நிலைமை எப்படி? விட்டுப்போன ஷட்டிங் மீண்டும் பரபரப்பாக நடந்தாலும், சம்பந்தப்பட்ட இருவரும் இன்னும் சேர்ந்து கேமிரா முன் நிற்கவில்லையாம். இந்த நேரத்தில்தான் அந்த சூடான செய்தி கிசுகிசுக்கப்படுகிறது கோடம்பாக்கத்தில். இவர் காதலை அவர் கெடுத்தார். அவர் காதலை இவர் கெடுத்துட்டார். இதில் யாரும் யாருக்கும் சளைச்சவங்க இல்ல. நாம எதுக்கு கவலைப்படணும்… என்று முகவாய் கட்டையை முறுக்கிக் கொண்டு கேட்கிறது அந்த கிசுகிசுப்பு.

நிஜம் என்னவாம்? முதல் காதல் முறிந்து ரெண்டாவது காதல் செட்டானது அந்த யங் ஸ்டாருக்கு. மும்பை கோதுமையான அந்த மொத் நடிகை மீது இவருக்கு வந்த காதலை பார்த்து கொதிக்கவில்லை, கோபப்படவில்லை பெற்றோர். அட… இதுவாவது புட்டுக்காம இருந்தா சரி என்றே நினைத்தார்கள். ஹீரோவும் அந்த மொத் நடிகையை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அப்பாவிடம் ஆசி பெற வைத்தார். வானத்தில் இன்பமாக பறந்தார்கள் இருவரும். அந்த நேரத்தில்தான் ஒரு புதுப்படத்தில் நடிக்கப் போனார் மொத். அந்த படத்தின் ஹீரோ வேறு யாருமல்ல. சூசைட் ஹீரோதான். படப்பிடிப்பில் சாதாரணமாக பேச ஆரம்பித்து, அப்படியே யங் ஹீரோ பற்றி நிறைய போட்டுக் கொடுத்தாராம். அதற்கப்புறம்தான் அந்த காதல் புட்டுக் கொண்டது.

இப்போது நிலைமை ரிப்பீட். சூசைட் ஹீரோவின் காதலி யங் படத்தில் நடிக்கிறார். இவர் பங்குக்கு அவர் பற்றி போட்டுக் கொடுத்தாராம் இவர். இப்படி மாற்றி மாற்றி ஓதியதில் இருவர் காதலும் எக்ஸ்பயரி ஆகிவிட்டது. கோடம்பாக்கத்தில் நடிப்பதை தவிர மீதி எல்லா விஷயத்தையுமே முனைப்போடு செய்கிறார்கள் ஹீரோக்கள். அடுத்தவர் காதலை கெடுப்பது உட்பட!

விதையொன்னு போட்டா கதையொன்னா முளைக்கும்? அனுபவிங்க சார்ஸ் அனுபவிங்க…!

Read previous post:
‘ தமிழ்நாடு முழுக்க தம்பிங்க பெருகிட்டாங்க ’ சீமான் பதிலால் கோபமான இயக்குனர்!

சீமானுக்கு தமிழகம் முழுக்க ஏராளமான தம்பிகள். ஆனால் ஆரம்ப காலத்தில் அவரை பைக்கில் வைத்துக் கொண்டு கம்பெனி கம்பெனியாக சுற்றிய தம்பி நாகேந்திரன்தான். இவர் இயக்கி வரும்...

Close