லிங்காவை வாங்கிய வேந்தர். சுற்றி வளைத்து உள்ளே வந்தது லைக்கா? வேர் இஸ் வேல்முருகன்?
துக்குனா தும்பிக்கை, இறக்குனா இடி என்று அதிரடியாக தயாராகிக் கொண்டிருந்த ‘லிங்கா’, வேக வேகமாக ரன் எடுத்து க்ளீன் யூ சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டதாம் சென்சாரில். இனி பிரமாண்டமான வெளியீடுதான் பாக்கி. திடீரென தமிழ்நாட்டு விவசாயிகள் மீது பாசம் காட்ட ஆரம்பித்திருக்கும் விஜய், விஞ்ஞானி டைப் கதைதான் இது என்றாலும்,வாய்ஸ் கொடுக்கப் போவது ரஜினியாச்சே? அதனால் இப்போதிலிருந்தே லிங்காவை வழிமேல் விழிவைத்து ரசிக்க காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தலைவர் ஏதாவது அரசியல் பேசியிருப்பாருப்பா… என்கிற ஏக்கத்தோடும் இந்த படத்திற்காக காத்திருக்கிறார்கள் அவர்கள். இந்த நேரத்தில்தான் தானாக வந்து அரசியலில் சிக்கியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. லிங்கா படத்தின் விநியோக உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. அவர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறதாம் லைக்கா நிறுவனம். கோவை ஏரியாவை தவிர, மீதி எல்லா ஏரியாக்களும் லைக்கா கைவசம் போயிருப்பதாக தகவல்கள் பறக்கிறது கோடம்பாக்கத்தில்.
ராஜபக்சேவின் நண்பர் என்றும் அவர் பணத்தில்தான் கத்தியே உருவானதென்றும் போராட்டத்தில் குதித்தார் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். அதற்கப்புறம் பெரும் போராட்டத்திற்கு பிறகு, கடைசி நேர இழுபறியிலிருந்து மீண்டு திரைக்கு வந்தது கத்தி. அப்பவும் லைக்கா என்கிற பெயரே படத்தில் இடம் பெறாமல்தான் வெளியானது. இந்த நிலையில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறது அதே நிறுவனம்.
லிங்கா படத்தின் சேனல் உரிமையே ஜெயா தொலைக்காட்சி வசம் இருக்கும் போது, ‘லைக்கா ’ உள்ளே வந்ததற்கு வேல் முருகன் என்ன செய்வார், பாவம்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. தலைவரின் லிங்கா படம் எங்களது சிறந்த தினம் மனித தெய்வம் அவதரித்த நாள் 12.12.2014 அன்று வெளியாகும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். லிங்கா படம் மாபெரும் வெற்றி படைப்பாக அமையும். வசூலில் தலைவரின் முந்தய சாதனை படமான எந்திரனின் வசூல் சாதனையை முறியடிக்கும்.
மனித தெய்வம் ரஜினி நற்பணி இயக்கம்
மலைகோட்டை, திருச்சி
கடந்த இரண்டு மாத காலமாக எந்த தினசரி பத்திரிக்கை எந்த வார இதழ் எந்த மாத இதழ் எடுத்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படம் இல்லாமல் செய்தி இல்லை. மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரே படம் தலைவர் ரஜினி நடித்த லிங்கா படம் தான். இதில் மாற்று கருத்து இல்லை.
தமிழ் அன்பன்