மீண்டும் விஜய்? லைக்கா திட்டம்!

ராஜபக்சேவின் ரைட் ஹேண்டு, சிறீசேனாவின் ஸ்பெஷல் புல்லட் என்றெல்லாம் லைக்கா அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவை ஆங்காங்கே கிள்ளி வைத்த சமூக காவலர்கள் அத்தனை பேரும் போட்ட வெத்தலை சிவக்கலையே ராசான்னு மேலும் கொஞ்சம் சுண்ணாம்பு தேடப் போயிருப்பார்கள் போலிருக்கிறது. சமீபத்தில் எந்திரன்2 படத்திற்கு நாங்கதான்யா மொதலாளி என்று அமர்க்களமாக அறிவித்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்க போய்விட்டார் அல்லிராஜா. நடுவில் இதே நிறுவனம் சில படங்களை வெளியிட்டு கல்லா கட்டியது தனி.

கத்தி படத்தை தயாரித்து அதை வெளிக் கொண்டு வருவதற்குள், பட்ட பாட்டை உலகம் மறப்பதற்குள், அடுத்ததாகவும் விஜய்யுடன் இணைய திட்டமிட்டிருக்கிறதாம் லைக்கா. எவ்வளவோ சோதனைகள் ரிலீஸ் நேரத்தில் வந்தாலும், விஜய்யை பொறுத்தவரை அவரது சினிமா கேரியரில் கத்தி மிக முக்கியமான படம்தான் சந்தேகமில்லை. இந்த நிலையில் மீண்டும் லைக்கா தன்னை லைக் பண்ணுகிறது என்று தெரிந்தால், வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்?

மனப்பூர்வமாக சரி என்று கூறியிருக்கிறாராம்

Leave A Reply

Your email address will not be published.