கால் ஃபிரம் மம்பட்டியான்? கதிகலங்கிய நயன்தாரா!
ஒரு காலத்தில் மரண மாஸ் படங்களில் நடித்து வந்த பிரசாந்த் இப்போதெல்லாம் மரண லாஸ் படங்களாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆங்காங்கே உசிரோடு வெறிலையை குதப்பிக் கொண்டிருக்கும் அவரது மிச்ச சொச்ச ரசிகர்கள், “தம்பி ஒரு ஹிட்டு கொடுத்துருச்சுன்னா பார்த்துட்டு கண்ணை மூடிடலாம்” என்று உசிரை கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்க, ஒரு விசேஷமும் நடக்காது போலிருக்கிறது இப்போதைக்கு!
சாகசம் என்ற ஒண்ணாம் நம்பர் படத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த தியாகராஜன், இனியும் ஒப்பேற்றினால் உலகம் சும்மாவிடாது என்பதை புரிந்து கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. உகாண்டாவிலிருந்து இப்பதான் பறிச்ச பூ என்றெல்லாம் தன் படத்தின் ஹீரோயின்களை அறிமுகப்படுத்துவதை நிறுத்த முடிவெடுத்திருக்கிறாராம். அந்த ஒட்டிப்போன உலர் திராட்சைகளை கொண்டு வந்து அந்த நாட்டு அழகி இந்த நாட்டு அழகி என்றெல்லாம் அவர் சொன்னதை ஒரு ரசிகனும் நம்பினான் இல்லை. எனவே உள்ளூர் அழகிகளை பிடித்தாலொழிய ஒரு இஞ்ச் கூட தன் மகனின் மார்க்கெட்டை நகர்த்த முடியாது என்ற முடிவுக்கு வந்ததால் நயன்தாராவுக்குதான் முதல் போன் அடித்தாராம்.
“குயின் படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி வச்சுருக்கேன். அதில் நீங்கதான் நடிக்கணும்” என்று இவர் கேட்க, “யாரு டைரக்டர் ?” என்றாராம் நயன். “நான்தான்” என்று மம்பட்டியான் பதிலளிக்க, “ஸாரி… வேற யாராவது மார்க்கெட்ல டாப்ல இருக்கிற டைரக்டர்னா சொல்லுங்க. ட்ரை பண்ணலாம்” என்றாராம் அவர்.
ம்… இப்படியாக அடுத்த படத்தின் வேட்டை துவங்கியிருக்கிறது…