ஜாக்கிசான், ஷாருக்கானை தொடர்ந்து ரஜினிக்கு டத்தோ பட்டம்! மலேசிய அரசு முடிவு!

ரஜினி மலேசியாவுக்கு போய் இறங்கிய நாள்தான் அங்குள்ள மக்களுக்கு தீபாவளி. பாராட்டு கொஞ்சம் ஓவராயிருக்கே என்று யாரும் விமர்சிக்க தேவையில்லை. நிஜம் அதுதான். ஏன்? கடந்த இரண்டு மாதங்களாகவே மலேசியாவில் கடுமையான புகை மூட்டமாம். சூரியனை பார்த்தே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டதாம். கண்ணெரிச்சல், சாலையில் போக்குவரத்து சிக்கல், மன ரீதியாகவே சோர்ந்து போயிருந்தார்களாம் மக்கள். ஆச்சர்யம் என்னவென்றால், ரஜினி மலேசியா போய் இறங்கிய நாளில் இருந்தே சூரியன் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்துவிட்டான்.

புகை மூட்டமும் போயே போச்சு. ரஜினி கால் வைக்க, புகைமூட்டம் ஒழிந்ததென்னவோ எதேச்சையான விஷயமாக இருக்கலாம். ஆனால் இதை மிராக்கிள் என்று கொண்டாட ஆரம்பித்திருக்கிறது அங்கிருக்கும் ஊடகங்கள். குறிப்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றின் தலைப்பு செய்தியே இதுதானாம். மலேசியர்கள், தமிழர்கள், சீனர்கள் என்று எல்லாரும் ரஜினி வந்தபின்தான் புகை மூட்டம் மறைந்ததாக கருத… கொண்டாடப்பட்டு வருகிறார் அவர். நிற்க! அப்படியே இன்னொரு முக்கியமான செய்தி.

மலாக்கா ஆளுநர் துன் முகமட் கலில் யோக்கோபின் ரஜினியின் தீவிர ரசிகராம். அதற்கேற்ப மலேசியா போய் இறங்கியிடவுடன் ரஜினி சந்தித்ததும் இந்த ஆளுநரைதான். ஷாருக்கான், ஜாக்கிசான் இருவருக்கும் மலேசியாவின் கவுரவ பட்டமான டத்தோ பட்டத்தை வழங்கி கவுரவித்ததும் அவர்தான். அவர் முயற்சியில் ரஜினிக்கு டத்தோ பட்டம் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு உடனடியாக அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டதாம்.

மலேசியாவில் மிகப்பெரிய விழா எடுத்து அவருக்கு இந்த விருதை தரவிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியாக மலேசியா போனவர், டத்தோ ரஜினிகாந்த்தாக திரும்புறார். சந்தோஷம்னா சந்தோஷம் தமிழர்களே!

2 Comments
  1. ரேவதி ரவி says

    மன்னிக்கவும். விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் மனித தெய்வம், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இருப்பினும் விரும்பி கொடுப்பதை, நமது மனித தெய்வம் நாகரிகம் கருதி பெற்று கொள்வார் என நம்புகிறேன்.
    நான் வணங்கும் தெய்வம் எவர் கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வாழ்க, வாழ்க பல்லாண்டு வாழ்கவே.

  2. Raj says

    Dutho is an ordinary award(???). Actor Radharavi already got the award.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கொடுக்காத பனிஷ்மென்ட் கொடுக்கப் போறேன். வெயிட் அண்ட் ஸீ மை பாய்ஸ்!

“திராட்சையை புதைச்சுட்டு ஒயினா எடுக்கிறீயே? உன்னால ஒரு ஒயின் பாட்டிலை புதைச்சுட்டு திராட்சையா எடுக்க முடியுமா? ஆ ஹை... ஆ ஹை...” என்று குதித்துக் கொண்டிருந்தார் ஒரு...

Close