எதிரியா இருந்தா எனக்கென்ன? மணிரத்னம் முடிவால் அதிர்ச்சி!

எலி இளைச்சாலும் பல்லு ஸ்டிராங்குன்னு கடைசியா நிரூபிச்சிட்டார் மணிரத்னம். சமீபகாலமாக படு சறுக்கலில் இருந்த மணிரத்னத்தின் இமேஜ் மறுபடியும் எழுந்து நின்று விட்டது. எல்லாவற்றுக்கும் ஓ காதல் கண்மணி படத்தின் ஹிட்டுதான் காரணம். கஷ்டப்பட்டு காப்பாற்றிய அந்த இமேஜ் பைசா நகரத்து கோபுரமாக சாய்ந்துவிடாமல் காப்பாற்றுவதில் அக்கறை காட்ட வேண்டிய சூழலில் இருக்கிறார் அவர்.

இந்த நேரத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாராம். இந்தியா பாகிஸ்தான் தொடர்பான ஒரு கதையை படமாக்குவதுதான் அவரது நெக்ஸ்ட் அஜென்டா என்கிறது நிலையற்ற தகவல்கள். எதிரி நாடாக இருந்தால் எனக்கென்ன? என்கிற டைப் கதையாக இருக்கிறது அது. அந்த கதை விஷயம் எப்படி வெளியே கசிந்தது? வேறொன்றுமில்லை. இந்த படத்திற்காக அவர் ஒரு அழகான பாகிஸ்தான் பெண்ணை தேடி வருகிறாராம். இதற்காக அவரது குழு பாகிஸ்தானுக்கு சென்றிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.

ஒரு இந்திய பையனும் பாகிஸ்தான் பெண்ணும் காதலிக்கிற கதையாக இருந்தால் தப்பிக்கலாம். காதலை வைத்துக் கொண்டு அதற்குள் இறங்கி அவர் பேசப் போகும் அரசியல், சென்சார் போர்டின் கண்களில் ஊசியை குத்தினாலும் ஆச்சர்யமில்லை. எதுவாக இருந்தாலும், ஆரம்ப நிலையிலையே அழிச்சாட்டியம் பண்ணாமல் காத்திருக்கலாம். ஒருவேளை ப்யூர் காதல் கதையாக இருந்து தொலைத்துவிட்டால், அதற்கு தேசம் எது? திண்ணையின் ஓரம்தான் ஏது?

வழக்கம் போல ஜமாய்ங்க மணி

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிரகாஷ்ராஜுக்கு கட்டையை போட்ட விஜய்?

ஒரு காம்பினேஷன் ஹிட்டாகிவிட்டால், அந்த காம்பினேஷனை அவ்வளவு சீக்கிரம் பிரிக்க மாட்டார்கள் சினிமாவில். ரசிகர்கள் விரும்புவது ஒரு காரணமாக இருந்தாலும், வியாபார ஏரியாவில் இந்த ‘காம்பினேஷன்’ என்ற...

Close