பேருதான் மஞ்சள்! பேக்ரவுண்டு டண்டணக்கா!

மங்களகரமா இருக்கட்டுமே என்று ‘மஞ்சள்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் ஒரு படத்திற்கு. ஆனால் கதை? அதன் களம்? எழவு வீடு பாஸ்… எழவு வீடு! ஏற்கனவே விழா, மதயானை கூட்டம், என்று சாவு வீட்டு சமாச்சாரங்கள் தமிழ்சினிமாவுக்கு பழகியிருக்கே என்றால், சட்டுபுட்டென்று ஆமோதிக்கிறார் மஞ்சள் படத்தின் இயக்குனர் சத்ய சரவணா. ஆமாம்… நான் இல்லேங்கல. ஆனா அதுக்கெல்லாம் முன்னாடியே நான் இந்த கதையை எழுதிட்டேன். இருந்தாலும் அதெல்லாம் வேற. என்னோட கதை வேற.

விழா படத்தில் ஹீரோ பறையடிக்கிறவன். அவன் போற இடத்தில் ஒப்பாரி பாடுற ஒருத்தியோட காதல் வரும். எங்க படத்துல அப்படியில்ல. ஹீரோ பறையடிக்கிறவன்தான். ஆனால் அவனோட காதல் வேற. படத்தில் வரும் திருப்புமுனை வேற. காதலிக்கிற இரண்டு பேர் திடீர்னு ஒரு சோகத்தை சந்திக்க வேண்டி வருது. அதிலேர்ந்து கதாநாயகி எப்படி மீண்டாள்ங்கறதுதான் எங்க படத்தின் கதை என்றார் சத்ய சரவணா. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டையே குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்திற்கு அழுத்தம் திருத்தமாக கண்டனம் தெரிவிக்கிறார்களாம் இந்த படத்தில்.

யதார்த்த படம்னு சொல்லிட்டோம். பாடல் காட்சிகளிலிருந்து படத்தில் வசனங்கள் வரைக்கும் அவ்வளவும் வாழ்க்கையோடு ஒன்றிய விஷயமாதான் இருக்கும். ஒரு குடும்பத்தை ஜன்னல் வழியா பார்த்தா என்ன உணர்வு வருமோ, அதுதான் இந்த படத்தின் ஸ்பெஷல் என்றார் அவர். இதற்கு முன்பு திட்டக்குடி என்ற படத்தில் இசையமைத்த செல்வநம்பி என்பவர்தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

மஞ்சள் படத்தின் தயாரிப்பாளரை மீட் பண்ணுறதுக்கு முன்னாடியே படத்தில் வர்ற எல்லா பாடல்களையும் கம்போஸ் பண்ணி பாட்டாவே வச்சுருந்தோம். அதை கேட்டுட்டு இன்னும் இம்ப்ரஸ் ஆகிதான் இந்த படத்தை தயாரிக்கிறாங்க அவங்க என்றார் சத்ய சரவணா.

தயாரிப்பாளர்களான எல்.சுரேஷ், எல் கணேஷ், ஒய் ப்ரியா மூவருமே இந்த கதைக்குள் அப்படியே ஐக்கியமாகியிருக்கிறார்கள். இல்லையென்றால் இந்த யதார்த்த படத்திற்கு இதுவரைக்கும் இரண்டரை கோடி செலவு செய்திருப்பார்களா?

பர்பெக்ட் முக்கியம் சார் என்கிறார்கள் கோரஸசாக! ரசிகர்கள் எல்லாரும் சேர்ந்து ஆதரவு கொடுத்தால், தமிழ்சினிமாவில் இதுபோன்ற யதார்த்த படங்களுக்கும் சிறகு முளைக்குமே!

பின்குறிப்பு- இப்படத்தின் ஹீரோ திரு, பாலுமகேந்திரா நடிப்பு பயிற்சி பள்ளியில் கற்று தேர்ந்தவராம். அப்ப அண்ணாரின் ஆசியும் இருக்குன்னு சொல்லுங்க.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சினிமாவுக்கு முழுக்கு? கானா பாலா முடிவு!

அட்டக்கத்தி படத்திலிருந்துதான் அப்படியொரு குரல் இருப்பதை கண்டு கொண்டது திரையுலகம். அதை தேடிக் கொண்டு வந்த டைரக்டர் ரஞ்சித்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகத்திற்கே உழைத்து...

Close