மனோபாலாவை கதற விட்ட சோனா!
நம்ம நல்லாதான் வண்டி ஓட்றோம். எதிர்ல வர்றவன் மெனக்கட்டு வந்து விழுந்தால் என்ன செய்யறதாம்? கிட்டதட்ட அப்படியொரு மனநிலைக்கு ஆளாகிவிட்டார் மனோபாலா. காரணம்? ஒரு முக்கியமான சம்பவம்!
சம்பவ தினத்தில் அவருக்கு ஜோதிடத்தில் சந்திராஷ்டம் இருந்திருக்கலாம். பல்லி தலையில் விழுந்திருக்கலாம். பூனை குறுக்கே போயிருக்கலாம். அல்லது குர்பானிக்கு வந்த ஒட்டகத்தில் ஏதாவது ஒன்று அவர் காதுக்கு பக்கதில் வந்து ‘கலிச்’சென்று தும்மியிருக்கலாம். மனுஷர் ஆடிப்போய் விட்டார் ஆடி!
வேறொன்றுமில்லை. ஒரு படப்பிடிப்பில் மனோபாலாவுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த சோனா, “ஒரு செல்பி எடுத்துக்குறேன்” என்று எடுத்தாராம். அப்புறம் அவர் செய்ததுதான் இ.பி.கோவே இடிந்து போகிற அளவுக்கான அட்ராசிடி.
‘மை ஸ்வீட் ஹபி’ என்று எழுதி அதை ட்விட்டரில் போட்டு விட்டார். அப்படியென்றால் ‘என் அன்பான புருஷன்’ என்றுதானே அர்த்தம்? விஷயம் மனோபாலாவின் கிச்சன் கேபினெட் வரைக்கும் போய், ஒரே ஐய்யோ குய்யோவாம். “ஒரு வாரம் வீட்டு பக்கம் நிம்மதியா போய் வர முடியலைப்பா… இந்த பொண்ணு இவ்ளோ வால் பொண்ணா இருக்கக்கூடாது” என்று அலுத்துக் கொண்டார்.
பிரேம்ஜியில் ஆரம்பித்து, பிஸ்கோத்து மனோபாலா வரைக்கும் சோனா கொடுக்கிற ஷாக்குக்கு, கோடம்பாக்கத்தில் இந்நேரம் ஆறேழு டிரான்ஸ்பார்மர் எரிஞ்சுருக்கணும்! ஹையோ ஹையோ…
To listen audio click below:-