சாந்தமே ஃபுல் ஆகலயாம்! இதுல சத்யம் வேணும்னா எப்படி?

“அடைந்தால் மகாதேவி… அடையலேன்னா? அடியேன்தான் பாவி” என்கிற மனோநிலையை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தி வரும் ஒரே மல்டிபிளக்ஸ் தியேட்டர் மவுன்ட்ரோடில் இருக்கும் சத்யம் காம்பளக்ஸ்தான். மிகப்பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமே சத்யத்தை விட்டுத்தரும் நிர்வாகம், சற்றே அடுத்த லெவல் ஹீரோக்கள் என்றால், சாந்தம், பாந்தம் என்று எதையாவது தள்ளிவிட்டுவிடும். அந்த தியேட்டர்களில் எண்ணிக்கை குறையவான சீட்டுகள்தான் இருக்கும். அதற்கேற்ப கலெக்ஷனும் கமிஷனும் போய் சேரும் படம் போட்டவர்களுக்கு.

அது மட்டுமல்ல, சத்யம் என்றால் அது பைவ் ஸ்டார் மெடல் குத்திய மாதிரி. அந்த மனநிறைவுக்காகவும் சத்யம்ல ஷோ வாங்கிடுங்க என்று விநியோகஸ்தர்களை விரட்டுவார்கள் தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும். இந்த ‘பிரஸ்டீஜ்’ குக்கரில்தான் சிக்கி வெந்து போயிருக்கிறாராம் விஷால். அவர் நடித்த மருது படத்திற்கு சத்யம் தியேட்டரை ஒதுக்க சொல்லி தலைகீழாக நின்று பார்த்தார்களாம். சாந்தம் முதல்ல தர்றோம். கூட்டம் பிக்கப் வச்சு சத்யத்துக்கு மாத்திக்கலாம் என்று மருது தரப்பிடம் கூறிவிட்டதாம் நிர்வாகம்.

இப்போது என்ன ரிசல்ட்?

சாந்தமே ரிசர்வேஷன் புல் ஆகவில்லையாம். அப்புறம் எப்படி சத்யம் கிடைக்கும்? என்னதான் சங்கம் கிங்கம்னு சிங்கம் மாதிரி திரிஞ்சாலும், விஷால் இன்னும் அஜீத் விஜய் சூர்யா ரேஞ்சுக்கு வரலையோ என்னவோ?

2 Comments
  1. Ravi says

    Unmailaye 3 rd place la irukura actor Vijay than(After Rajini and kamal) but media la sollum pothu Rajini,Kamal,Ajith ,Vijay solrathula intha pathirikai kara naye galuku oru alpha santhosam…

    Vijay 3rd place illanu yevanavathu solla sollu with Source

  2. balaji says

    yes you are right ravi..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆன்ட்ரியா அரேபிய குதிரையாம்… வர்ணிக்கும் ஒரு வம்பு இயக்குனர்!

கற்றது தமிழ், தங்கமீன்கள், தொடர்ந்து இயக்குனர் ராமின் புதிய படம் தரமணி. ராம் படங்கள் என்றால் அது வழக்கமான ஃபார்முலாவுக்குள் அடங்காது. இந்த படம் எப்படியிருக்கும்? அவரே...

Close