லதா ரஜினிக்கு தொந்தரவு வராதபடி நாங்களே கடனை அடைப்போம்! கோச்சடையான் தயாரிப்பாளர் பளீர் விளக்கம்!

கோச்சடையானில் ‘சடை’ இருப்பதாலேயே என்னவோ ‘சிக்கலும்’ இருக்கிறது போலும். கடந்த சில தினங்களாக வெளிவரும் செய்திகளில் லதா ரஜினிகாந்த்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஏலத்திற்கு வருவதாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. இது தொடர்பாக  மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்டென்ட் நிறுவனர் டாக்டர் முரளி மனோகர் தனது தன்னிலை விளக்கத்தை முழுமையான அறிக்கையாக அனுப்பியும் கூட வதந்திகள் நின்பாடில்லை. வேறு வழியில்லாமல் இன்று எல்லா ஊடங்களையும் சந்தித்து தன் தரப்பு விளக்கத்தை அளித்தார் டாக்டர் முரளி மனோகர்.

“நான் இங்கே சில உண்மைகளை பகிர்ந்து கொள்ளவே உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். உங்கள் முன் யதார்த்தத்தை சொல்லவே வந்துள்ளேன். குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் ஒரு பொது நிறுவனம். இதுகடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது படத்தயாரிப்பு, பட விநியோகம், திரையீடு என பலவிதமான தளங்களிலும் இயங்கிவருகிறது. படத்தயாரிப்பை எடுத்துக் கொண்டால் ஐஸ்வர்யாராய், மிராண்டா ரிச்சர்ட்சன் நடித்து ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த “provoked” போன்ற சர்வதேச தரத்திலான படங்களையும் சர்வதேச சந்தைக்குச் கொண்டு சென்றிருக்கிறது.தமிழில்’ஜீன்ஸ்’ ‘மின்னலே’ ‘தாம் தூம்’போன்ற வற்றைத் தயாரித்தோம்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை எங்களுக்கு சொந்தமானவை, குத்தகை என்று 30 திரையரங்குகள் உள்ளன. இந்த வரிசையில் மேலும் சில திரையரங்குகளைக் கொண்டுவர ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் சமமாக்கி ஒரு சுதந்திரமான சங்கிலியாக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

நம் நாட்டு பிரபலங்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக 1988 லேயே ‘ப்ளட் ஸ்டோன்’ எடுத்தேன். அதே போல ‘கோச்சடையான்’ படத்தை சர்வதேச தரத்துடன் எடுக்க நினைத்தோம். இங்கென்றால் வியாபார லாபம் நஷ்டம் உடனே தெரிய வரும் . .நம் பிரபலங்களை உலக அளவில் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல் வியாபார லாபம் சற்று தாமதம் ஆகும் கோச்சடையான்’ படத்தைப் பொறுத்தவரை அதை பல வெளிநாட்டு மொழிகளில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆங்கிலமொழி சம்பந்தமான வேலைகள் இப்போதுதான் நடக்கிறது.

அது ஒரு தொழில் நுட்பரீதியிலான நல்ல முயற்சி. ஆனால் அப்போது நிதிப்பிரச்சினை ஏற்பட்டது. மீடியா ஒன் குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் எக்ஸிம் வங்கியில் 20 கோடி ரூபாய் சட்டத்திற்கு உட்பட்டுதான் கடன் வாங்கியது. இதை தனது சுயமான திருப்பிச் செலுத்தும் சக்தியுடன் தான் வாங்கியது. அப்போது பிரச்சினை வந்த போது திருமதி லதா ரஜினிகாந்த் எங்களுக்கு உதவ எங்களுடன் இணைந்தார். கடனுக்கு வங்கியில் உத்திரவாதம் அளித்தார்.

உண்மையில் இந்நிறுவனம் 31.3.2015 க்குள் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த இருக்கிறது. இதை முடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 2014ல் வங்கியுடன் சுமுகமாக முடிந்துள்ளன.

வங்கிக்கான வட்டியை ஜூன் 2014 வரை முறையாக தொடர்ச்சியாக செலுத்தியே வந்து இருக்கிறது. நிதிப்பிரச்சினை எல்லாருக்கும் வருவது சகஜம்தான். எங்களுக்கும் வந்தது. .அதிலிருந்து மறு சீரமைப்பு செய்து வேறு வேறு வரவு ஆதாரங்கள் மூலம் மீளும் திட்டமும் வகுக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் உத்திரவாதம் அளித்தவர் மட்டுமே.ஆனால்அவரை சம்பந்தப்படுத்தி செய்திகள் வருகின்றன. எனவே உத்திரவாதம் அளித்த அவருக்கு தொந்தரவு தராதபடி நாங்களே கடனை அடைத்து விடுவோம். தவறான செய்திகளை நம்ப வேண்டாம். “இவ்வாறு அவர் கூறினார்.

1 Comment
  1. Manirathnam says

    நம்மவர்களுக்கு ரஜினி என்றால் இளப்பம் தான். இதே கோட்சடையான் படம் கமலோ இல்லை வெள்ளைக்காரன் நடித்து இருந்தாலோ தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அனிமேஷன் படம் என்ற வகையில் கோட்சடையான் சிறந்த படம் தான்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிடிச்சது இந்தியன்னா எடுக்கறது பாய்ஸ்சா? கப்பல் பட இயக்குனரின் ‘சவாலே சமாளி ’ பதில்!

கடந்த வாரம் வெளியான கயல், மீகாமன், கப்பல், வெள்ளைக்கார துரை ஆகிய அந்த நான்கு படங்களில் எது ஹிட் என்கிற கேள்விக்கு பொருத்தமான விடை ரசிகர்கள் மனசிலும்...

Close