ஓட்டல் அறையை மறுத்து இயக்குனரின் வீட்டில் தங்கிய நடிகை?

கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்கல பானை போலிருந்த மீனாட்சி, இப்போது தங்க கிண்ணம் போலிருக்கிறார். சுமார் பதினெட்டு கிலோ எடையை குறைத்திருக்கிறாராம். வில்லங்கம் படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் மீனாட்சி, இதற்கு முன்பு கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ்சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்தான். அதற்கப்புறம் ஸ்டார் ஓட்டலில் ரூம் கேட்கிறார். ‘நார்த் அமெரிக்காவுல விளைஞ்ச திராட்சைன்னா நல்லாயிருக்குமாம்ல? ஒரு கிண்ணத்துல நல்லா புழிஞ்சு கொண்டு வர முடியுமா?’ என்றெல்லாம் அவர் தயாரிப்பாளர்களுக்கு டார்ச்சர் கொடுத்ததாக கதைக்கிறது கடந்த கால கட்டபஞ்சாயத்து வரலாறுகள். எப்படியோ மனம் திருந்தி, உடல் இளைத்து ‘வில்லங்கம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மீனாட்சியிடம் ஒரே வியத்தகு மாற்றம் என்கிறது யூனிட்.

என்னவாம்?

இந்த படத்தில் அரசு ஊழியராக நடித்துக் கொண்டிருக்கிறார் மீனாட்சி. இதற்காக பூந்தமல்லி தள்ளி ஒரு பிரமாண்டமான வீட்டில் ரிஜிஸ்தர் ஆபிஸ் செட் போட்டிருக்கிறார் டைரக்டர் டி.ஆர்.சரவணன். இவரது வீடும் பூந்தமல்லிக்கு அருகில்தான் இருக்கிறது. சென்னையின் மைய பகுதியான கோடம்பாக்கத்தில் மீனாட்சிக்கு பிரபல ஓட்டல் ஒன்றில் ரூம் போட்டு கொடுத்திருந்தார்கள். இங்கிருந்து தினந்தோறும் பூந்தமல்லிக்கு டிராவல் ஆகி நடித்துக் கொண்டிருந்த மீனாட்சி, ‘இந்த டிராபிக்ல டைம் வேஸ்ட் ஆகுது. குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே ஷுட்டிங் வர முடியல. அதனால் உங்க வீட்டிலேயே தங்கிக்கிறேன்’ என்று கூறி, டைரக்டர் வீட்டிலேயே தங்கியிருந்து நடித்துக் கொடுத்தாராம்.

அறிமுக இயக்குனரின் வீடு எப்படியிருக்கும்? குறைந்த பட்ச வசதிகள் மட்டுமே இருந்தாலும், அதை நிறைந்த மனதுடன் ஏற்றுக் கொண்ட மீனாட்சியை பார்த்து, ‘என் படத்துக்கு இந்த மீனாட்சியை அந்த மதுரை மீனாட்சியே அனுப்பி வச்சுருக்கா போலிருக்கு’ என்று உருகுகிறார் சரவணன்.

கம்பீரமான நின்ன கட்டிடமே, பட படன்னு இடி இடிச்சா பொல பொலன்னு நொறுங்கிருது. மீனாட்சியோட ஈகோ நொறுங்காதா? வெல்டன் மீனாட்சி. இப்படியே நடந்துக்கங்க!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
லவ் பண்ணுவதாக சொன்னவரை ‘போடா’ என்று திட்டிய பூஜா!

பூஜா என்றால் தமிழில் என்ன அர்த்தமோ, தெரியாது. ஆனால் இன்று அவர் பேசியதை கேட்டிருந்தால் பூஜா என்றால் ‘ஒளிவு மறைவு அற்றவர்’ என்று அர்த்தம் கொள்வீர்கள். அந்தளவுக்கு...

Close