பார்வையில்லாத மீரா ஜாஸ்மினை பிடித்து ஆட்டுகிறதாம் பேய்
D.V. சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் D.வெங்கடேஷ் தயாரிக்கும் படம் “ கண்கள் இரண்டால் “ மலையாளத்தில் ” மிஸ்ஸஸ் லேக்கா தரூர் “ என்ற பெயரில் வெளியான படமே தமிழில் “ கண்கள் இரண்டால் “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில் மீராஜாஸ்மின் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கிறார். கதாநாயகனாக அலெக்ஸ் நடித்திருக்கிறார். மற்றும் வேணி, முத்துலஷ்மி, மகேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, இயக்கம் – ஷாஜியம்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…..
முதல் முறையாக இந்த படத்தில் பார்வையற்ற பெண்ணாக மீராஜாஸ்மின் நடித்திருக்கிறார். பார்வை இல்லாத மீராஜாஸ்மின் டிவி சேனல் ஒன்றி ரியாலிட்டி ஷோ நடத்திவருகிறார். இதற்கிடையில் காதலில் விழுந்த மீரா ஜாஸ்மினுக்கு ஆப்பரேசன் செய்ய காதலன் ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் மீராஜாஸ்மினுக்கு தனது உடம்பில் எதோ ஒரு ஆவி இருப்பது போல் ஒரு உணர்வு தனது அருகில் ஏதோ ஒரு உருவம் இருப்பதுபோல் தோன்றி கொண்டே இருக்கிறது. இறுதியில் அது வெறும் உணர்வுதானா அல்லது நிஜமாகவே அவரது உடலில் ஆவி இருந்ததா அறுவை சிகிச்சை செய்தார்களா இலையா பார்வை வந்ததா இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதை. திரில்லர் மற்றும் காதல், நட்பு போன்ற அனைத்தும் கலந்ததுதான் இந்த கண்கள் இரண்டால் படம் என்றார் இயக்குனர்.